சென்னையில் நேற்று ஆபரணத்தங்கத்தின் விலையில் சவரனுக்கு ரூ. 112 குறைந்து, ஒரு சவரன் ரூ.35 ஆயிரத்து 40-க்கு விற்பனையானது. கிராமுக்கு ரூ.14 குறைந்து ரூ.4 ஆயிரத்து 380 ஆக இருந்தது.
தங்கம் விலையில் கடந்த வாரம் ஏற்ற, இறக்கம் காணப்பட்டு வந்தது. நேற்று முன்தினம் விலை அதிரடியாக குறைந்தது. பவுனுக்கு ரூ.560 குறைந்து ரூ.35 ஆயிரத்து 152-க்கு விற்பனையானது. ஒரு கிராம் ரூ.4 ஆயிரத்து 394 ஆக இருந்தது.
இந்த நிலையில் நேற்றும் தங்கம் விலை குறைந்தது. சென்னையில் நேற்று காலை தங்கத்தின் விலையில் பவுனுக்கு ரூ.112 குறைந்து ரூ.35 ஆயிரத்து 40-க்கு விற்பனையானது. கிராமுக்கு ரூ.14 குறைந்து ரூ.4 ஆயிரத்து 380 ஆக இருந்தது. தங்கம் விலை குறைந்தாலும் வெள்ளி விலையில் நேற்று உயர்வு காணப்பட்டது. வெள்ளி கிலோவுக்கு ரூ.700 அதிகரித்து ரூ.74 ஆயிரத்து 300 ஆக இருந்தது. ஒரு கிராம் வெள்ளி ரூ.74.30-க்கு விற்பனையானது. தங்கம் விலை கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் புதிய உச்சத்தை தொட்டது. பவுன் ரூ.43 ஆயிரத்தை தாண்டியது. அதன்பின் விலை குறைந்தபடியே இருந்தது. இந்த ஆண்டு தொடக்கத் தில் பவுன் ரூ.38 ஆயிரத்துக்கு கீழ் வந்தது. அதன்பின்னும் விலையில் ஏற்ற தாழ்வு இருந்து வந்தது. ஆனாலும் சமீபத்தில் பவுன் ரூ.36 ஆயிரத்துக்கு கீழ் வந்தது. தற்போது விலை குறைந்த படி தங்கம் பவுன் ரூ.35 ஆயிரத்துக்குக் கீழ் வர வாய்ப்புள்ளது என்று எதிர்பார்க்கப்படுகிறது.