முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இங்கிலாந்து அணிக்கு புதிய பேட்டிங் பயிற்சியாளராக ட்ரெஸ்காதிக் நியமனம்

திங்கட்கிழமை, 1 மார்ச் 2021      விளையாட்டு
Image Unavailable

Source: provided

லண்டன் : இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்கு புதிய பேட்டிங் பயிற்சியாளராக முன்னாள் வீரர் மார்கஸ் ட்ரெஸ்காதிக் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்தப் பொறுப்பை மார்கஸ் ட்ரெஸ்காதிக் மார்ச் இரண்டாம் வாரத்தில் இருந்து ஏற்றுக்கொள்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்து கிரிக்கெட் அணியில் தொடக்க ஆட்டக்காரராக 2000 ஆம் ஆவது ஆண்டில் அறிமுகமானார் மார்கஸ் ட்ரெஸ்காதிக்.

இதுவரை 76 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 5825 ரன்களை எடுத்துள்ளார். அதில் 14 சதமும் 29 அரை சதமும் அடங்கும். அதிகபட்சமாக 219 ரன்களை விளாசியுள்ளார் ட்ரெஸ்காதிக்.

அதேபோல ஒரு காலத்தில் இங்கிலாந்துக்கு ஒருநாள் போட்டியில் தவிர்க்க முடியாத பேட்ஸ்மேனாகவும் திகழ்ந்தார் ட்ரெஸ்காதிக். இங்கிலாந்து அணிக்காக மொத்தம் 123 போட்டிகளில் விளையாடி 4335 ரன்களை எடுத்துள்ளார்.

அதில் மொத்தம் 12 சதங்களும் 21 அரை சதங்களும் அடங்கும். தொடர்ந்து சிறப்பாக விளையாடினாலும் இடையே காயத்தால் அவதிப்பட்டார் மார்கஸ் ட்ரெஸ்காதிக். இதனையடுத்து 2008 இல் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து தன்னுடைய ஓய்வை அறிவித்தார் ட்ரெஸ்காதிக்.

இப்போது சோமர்செட் கவுண்ட்டி கிரிக்கெட் அணிக்கு பயிற்சியாளராக இருந்து வருகிறார் மார்கஸ் ட்ரெஸ்காதிக். இதனையடுத்து தற்போது பேட்டிங் பயிற்சியாளராக இருக்கும் ரிச்சர்ட் டாவ்சன் விலக்கப்பட்டு கிளவுசெட்ஷையர் கவுண்ட்டி அணியின் பயிற்சியாளராக பணியமர்த்தப்படுகிறார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து