முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நடிகர் விவேக்கிற்கு தடுப்பூசியால் மாரடைப்பு ஏற்படவில்லை: மருத்துவமனை நிர்வாகம் விளக்கம்

வெள்ளிக்கிழமை, 16 ஏப்ரல் 2021      தமிழகம்
Image Unavailable

நடிகர் விவேக்கிற்கு கொரோனா தடுப்பூசியால் மாரடைப்பு ஏற்படவில்லை என மருத்துவர் விளக்கம் அளித்துள்ளா

நேற்று காலை முதலே தொடர்ந்து திரைப்பட படப்பிடிப்பில் இருந்து வந்த நடிகர் விவேக்கிற்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

இந்நிலையில், நடிகர் விவேக் உடல்நிலை குறித்து தனியார் மருத்துவமனை மருத்துவர், தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூட்டாக பேட்டியளித்தனர். அப்போது பேசிய மருத்துவர், 

 காலை 11 மணிக்கு சுயநினைவற்ற நிலையில் மருத்துவமனைக்கு நடிகர் விவேக் அழைத்து வரப்பட்டார். நடிகர் விவேக்கிற்கு ஆஞ்சியோகிராம், ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. விவேக் இதயத்தில் 100 சதவீதம் அடைப்பு உள்ளது. இதயத்தில் இருந்த 100 சதவீத அடைப்புக்கு ஆஞ்சியோ மூலமாக சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. விவேக்கிற்கு முழுக்க முழுக்க இதயம் தொடர்பான பிரச்சனைதான் உள்ளது. விவேக்கிற்கு கொரோனா தடுப்பூசியால் மாரடைப்பு ஏற்படவில்லை என்றார்.

மேலும், கூறுகையில், விவேக்கின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ள நிலையில், எக்மோ கருவி உதவியுடன் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளார். விவேக்கின் உடல்நிலை தற்போது வரை அபாய கட்டத்திலேயே உள்ளது.  அடுத்த 24 மணி நேரத்திற்கு பிறகே அவரது உடல்நிலை குறித்து தெரிவிக்க முடியும் என்றும் தெரிவித்தார்.

தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறுகையில், 

நடிகர் விவேக் தானாக முன்வந்து தடுப்பூசி போட்டுக் கொண்டார். மிகவும் நல்லெண்ணத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டார். நடிகர் விவேக்கிற்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது மிகவும் மனவேதனை அளிக்கிறது. RT-PCR பரிசோதனை, சி.டி.ஸ்கேனிலும் விவேக்கிற்கு கொரோனா தொற்று இல்லை என்றார்.

விவேக்கிற்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து மருத்துவக் குழுவுடன் ஆலோசனை நடத்தியுள்ளோம். விவேக் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது உண்மைதான். உடல்நிலை அபாய கட்டத்தில் உள்ளது. 24 மணி நேரத்திற்கு பிறகு தான் விவேக் உடல்நிலை குறித்து தெரிவிக்க முடியும் என்று அவர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து