முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சி.எஸ்.கேவுக்காக 200 போட்டிகளில் பங்கேற்பு: வயதாகிவிட்டதை போல உணர்வதாக கேப்டன் மகேந்திர சிங் டோனி பேட்டி

சனிக்கிழமை, 17 ஏப்ரல் 2021      உலகம்
Image Unavailable

Source: provided

மும்பை : சி.எஸ்.கேவுக்காக 200 போட்டிகளில் பங்கேற்றது மிக நீண்ட பயணம் என்று தெரிவித்த மகேந்திர சிங் டோனி, தற்போது வயதாகிவிட்டதை போல உணர்வதாக அவர் தெரிவித்துள்ளார்.

14-வது ஐ.பி.எல் டி-20 தொடரின் 8-வது லீக் ஆட்டத்தில் சி.எஸ்.கே - பஞ்சாப் அணிகள் மோதின. இதில் 6 விக்கெட் வித்தியாசத்தில் சி.எஸ்.கே அபார வெற்றிப் பெற்று, இந்தத் தொடரின் முதல் வெற்றியை பதிவு செய்தது. இந்தப் போட்டி கேப்டன் டோனிக்கு, சி.எஸ்.கேவுக்காக விளையாடும் 200- வது போட்டியாகும். இந்தப் போட்டியில் சி.எஸ்.கே வெற்றிப் பெற்றது பெரும் மகிழ்ச்சியை ரசிகர்களுக்கு தந்தது.

இதனையடுத்து வெற்றிக்கு பின்பு பேசிய டோனி "மிக வயதானவன் என்ற உணர்வை ஏற்படுத்தி உள்ளது. இது ஒரு மிக நீண்ட பயணம். கடந்த 2008-ம் ஆண்டு இந்த பயணம் தொடங்கியது. தென்ஆப்பிரிக்கா, துபாய் மற்றும் திரும்ப இந்தியாவில் விளையாடினேன். 200-வது போட்டியை மும்பையில் விளையாடுவேன் என நினைக்கவில்லை" என்றார்.

மேலும் "தீபக் சாஹர் தேர்ந்த பந்து வீச்சாளராகி விட்டார். பிராவோவும் தேவையான நேரத்தில் சிறந்த பந்து வீச்சை வெளிப்படுத்த கூடியவர் என்பதில் எந்த ரகசியமும் இல்லை" என்றார் டோனி.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து