முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

6-ம் கட்ட தேர்தல்: மேற்கு வங்கத்தில் விறுவிறுப்பாக நடந்த வாக்குப்பதிவு

வியாழக்கிழமை, 22 ஏப்ரல் 2021      இந்தியா
Image Unavailable

மேற்குவங்காளத்தில் 43 தொகுதிகளுக்கு நேற்று 6-ம் கட்ட தேர்தல் விறுவிறுப்பாக நடந்தது. நீண்ட வரிசையில் நின்று மக்கள் தங்கள் வாக்குகளை செலுத்தினர்.

8 கட்டமாக சட்டசபை தேர்தல் நடந்து வரும் மேற்கு வங்காளத்தில் 5 கட்ட வாக்குப்பதிவு முடிவடைந்திருக்கிறது. இந்த சூழலில் 6-வது கட்ட வாக்குப்பதிவு நேற்று காலை 7 மணிக்கு தொடங்கியது.  மாநிலத்தின் வடக்கு 24 பர்கானாக்கள், நாடியா, கிழக்கு பர்தமான், உத்தர் தினாஜ்பூர் ஆகிய 4 மாவட்டங்களை சேர்ந்த 43 தொகுதிகளில் இந்த வாக்குப்பதிவு நடைபெற்றது. 

இதற்காக மேற்படி மாவட்டங்களில் 14,480 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு இருந்தன. அவற்றுக்கான மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மற்றும் தேர்தல் ஊழியர்கள் அனைவரும் ஏற்கனவே அனுப்பி வைக்கப்பட்டு இருந்தனர். 

இந்த 6-ம் கட்ட தேர்தலில் வாக்களிக்க தகுதியான வாக்காளர்கள் 1.03 கோடி ஆகும். இதில் 50.65 லட்சம் பெண் வாக்காளர்களும், 256 மூன்றாம் பாலினத்தவர்களும் அடங்குவர். தேர்தல் களத்தில் உள்ள 306 வேட்பாளர்களில்  27 பேர் பெண்கள் ஆவர். அதுமட்டுமின்றி 82 சுயேச்சைகளும் இதில் அடங்குவர். வாக்குப்பதிவு நடைபெறும் 43 தொகுதிகளிலும் வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. மக்கள் சுதந்திரமாகவும், அமைதியாகவும் வாக்களிப்பதற்காக மாநில போலீசாருடன் இணைந்து, 1,071 கம்பெனி துணை ராணுவமும் களமிறக்கப்பட்டிருந்தனர். 

இந்த தேர்தலை சந்திக்கும்வேட்பாளர்களில் மாநில அமைச்சர்கள் மற்றும் திரிணாமுல் காங்கிரசை சேர்ந்த உஜ்ஜல் பிஸ்வாஸ், ஸ்வபன் தேப்நாத், சந்திரிமா படடாச்சார்யா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு தலைவர் தன்மோஸ் பட்டாச்சார்யா, பா.ஜனதா தேசிய துணைத்தலைவர் முகுல் ராய், மூத்த காங்கிரஸ் தலைவர்கள் மொகித் செங்குப்தா, அப்துஸ் சத்தார் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள் ஆவர். 

மாநிலத்தில் மீதமுள்ள 2 கட்ட வாக்குப்பதிவுகள் முறையே வருகிற 26 மற்றும் 29-ம் தேதிகளில் நடைபெறுகிறது. அதைத்தொடர்ந்து மே 2-ம் தேதி வாக்குகள் அனைத்தும் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன. இந்த தேர்தலில் 5 மணி நிலவரப்படி 70.42 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்ததாக தெரிவிக்கப்பட்டது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து