முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆக்சிஜன் விநியோகம் உ.பி.க்கு திருப்பி விடப்பட்டுள்ளது: மம்தா பேனர்ஜி குற்றச்சாட்டு

வெள்ளிக்கிழமை, 23 ஏப்ரல் 2021      இந்தியா
Image Unavailable

மேற்குவங்கத்திற்கு வந்து கொண்டிருந்த ஆக்சிஜன் விநியோகம் உத்தரபிரதேசத்திற்கு திருப்பி விடப்பட்டுள்ளது என்று மம்தா பானர்ஜி குற்றஞ்சாட்டியுள்ளார்.

இந்தியாவில் வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால் பல்வேறு மாநிலங்களில் ஆக்சிஜன் தட்டுப்பாடு, கொரோனா தடுப்பூசி தடுப்பாடு, ரெம்டெசிவிர் மருந்து, படுக்கை வசதிகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. தட்டுப்பாடுகளை பூர்த்தி செய்யும் நடவடிக்கையில் மத்திய, மாநில அரசுகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.

இதற்கிடையில், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட ஆக்சிஜன் டேங்கர்களை மற்ற மாநில அரசுகள் தடுத்து நிறுத்துவதாக குற்றஞ்சாட்டி வருகின்றன. குறிப்பாக, டெல்லிக்கு ஒதுக்கப்பட்ட ஆக்சிஜன் டேங்கரை தங்கள் மாநிலத்தில் இருந்து வெளியே விட அரியானா போன்ற மாநில அரசுகள் தடுப்பதாக டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் குற்றஞ்சாட்டி வருகிறார். 

இந்நிலையில், தங்கள் மாநிலத்திற்கு வந்து கொண்டிருந்த ஆக்சிஜன் உத்தரபிரதேசத்திற்கு திருப்பி விடப்பட்டுள்ளதாக மேற்குவங்காள முதல்வர் மம்தா பானர்ஜி நேற்று குற்றஞ்சாட்டியுள்ளார்.  இது தொடர்பாக மம்தா கூறுகையில், 

மேற்குவங்கத்திற்கு வந்து கொண்டிருந்த ஆக்சிஜன் விநியோகம் உத்தரபிரதேசத்திற்கு திருப்பி விடப்பட்டுள்ளது. பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் ஆக்சிஜன் விநியோகம் சரிவர பராமரிக்கப்பட்டு வருகிறது. நாங்கள் எங்கிருந்து ஆக்சிஜன் பெறுவது? என்று அவர் கேள்வி எழுப்பினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து