முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தீபாவளியை முன்னிட்டு வரும் 22-ம் தேதி வரை 110 சிறப்பு ரயில்கள் இயக்கம்

சனிக்கிழமை, 18 அக்டோபர் 2025      தமிழகம்
Train 2023-04-06

சென்னை, தீபாவளியை முன்னிட்டு இன்று முதல் 22-ம் தேதி வரையில் 110 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

தீபாவளி பண்டியை முன்னிட்டு சொந்த ஊர் செல்லும் பயணிகளின் வசதிக்காக பல்வேறு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே, நேற்று (சனிக்கிழமை) முதல் வருகிற 22-ம் தேதி வரையில் எத்தனை சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளது என்ற தகவலை தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:-

தாம்பரம்-திருச்சி (வண்டி எண்.06191), திருச்சி-தாம்பரம் (06190), போத்தனூர்-சென்டிரல் (06050), தாம்பரம்-கன்னியாகுமரி (06133), மதுரை-தாம்பரம் (06162), எழும்பூர்-மதுரை (06045), கோவை-திண்டுக்கல் (06139), திண்டுக்கல்-கோவை (06140), சென்டிரல்-போத்தனூர் (06049), மற்றும் தமிழ்நாட்டில் இருந்து மற்ற மாநிலம் செல்லும் ரயில், மற்ற மாநிலங்களில் இருந்து தமிழ்நாடு வரும் ரயில் என மொத்தம் 24 ரயில்கள் நேற்று (சனிக்கிழமை) இயக்கப்பட உள்ளது. 

திருச்சி-தாம்பரம் (06190), தாம்பரம்-திருச்சி (06191), நெல்லை-மேட்டுப்பாளையம் (06030), நாகர்கோவில்-தாம்பரம் (06012), போத்தனூர்-சென்டிரல் (06044), நெல்லை-செங்கல்பட்டு (06154), செங்கல்பட்டு-நெல்லை (06153) மற்றும் தமிழ்நாட்டில் இருந்து மற்ற மாநிலம் செல்லும் ரயில், மற்ற மாநிலங்களில் இருந்து தமிழ்நாடு வரும் ரயில் என மொத்தம் 19 ரயில்கள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இயக்கப்பட உள்ளது.

தாம்பரம்-நாகர்கோவில் (06011), தூத்துக்குடி-எழும்பூர் (06018), சென்டிரல்-கன்னியாகுமரி (06151), மேட்டுப்பாளையம்-நெல்லை (06029), செங்கோட்டை-தாம்பரம் (06014), திருச்சி-தாம்பரம் (06190), தாம்பரம்-திருச்சி (06191) மற்றும் தமிழ்நாட்டில் இருந்து மற்ற மாநிலம் செல்லும் ரயில், மற்ற மாநிலங்களில் இருந்து தமிழ்நாடு வரும் ரயில் என மொத்தம் 23 ரயில்கள் வருகிற 20-ம் தேதி இயக்கப்பட உள்ளது. எழும்பூர்-தூத்துக்குடி (06017), திருச்சி-தாம்பரம் (06190), தாம்பரம்-திருச்சி (06191), நாகர்கோவில்-சென்டிரல் (06054), கன்னியாகுமரி- சென்டிரல் (06152), தூத்துக்குடி-எழும்பூர் (06018), நெல்லை-செங்கல்பட்டு (06156), செங்கல்பட்டு-நெல்லை (06155), போத்தனூர்-சென்டிரல் (06100), மதுரை-தாம்பரம் (06046), கோவை-திண்டுக்கல் (06139), திண்டுக்கல்-கோவை (06140) மற்றும் தமிழ்நாட்டில் இருந்து மற்ற மாநிலங்கள் செல்லும் ரயில், மற்ற மாநிலங்களில் இருந்து தமிழ்நாடு வரும் ரயில் என மொத்தம் 25 ரயில்கள் வரும் 21-ம் தேதி இயக்கப்பட உள்ளன.

திருச்சி-தாம்பரம் (06190), தாம்பரம்-திருச்சி (06191), சென்டிரல்-நாகர்கோவில் (06053), கோவை-திண்டுக்கல் (06139), திண்டுக்கல்-கோவை (06140), நெல்லை-செங்கல்பட்டு (06156), செங்கல்பட்டு-நெல்லை (06155), சென்டிரல்-போத்தனூர் (06043) மற்றும் தமிழ்நாட்டில் இருந்து மற்ற மாநிலங்கள் செல்லும் ரயில், மற்ற மாநிலங்களில் இருந்து தமிழ்நாடு வரும் ரயில் என மொத்தம் 19 ரயில்கள் வரும் 22-ம் தேதி இயக்கப்பட உள்ளன.

தெற்கு ரயில்வே முழுவதும் சிறப்பு ரயில்களை பொறுத்த வரையில் கடந்த வியாழக்கிழமை 13 ரயில்களும், நேற்று முன்தினம் 24 ரயில்களும் இயக்கப்பட்டன. இதேபோல, வருகிற 22-ம் தேதி வரையில் மொத்தம் 110 ரயில்கள் இயக்கப்பட இருக்கிறது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடந்த 16-ம் தேதி முதல் வருகிற 22-ம் தேதி வரையில் மொத்தம் 147 சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டு உள்ளதாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 4 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 6 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 6 months ago
View all comments

வாசகர் கருத்து