முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

4-ம் தேதி தொடங்குகிறது அக்னி நட்சத்திரம்: 25 நாட்கள் நீடிக்கும்

சனிக்கிழமை, 1 மே 2021      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : அக்னி நட்சத்திரம் நாளை மறுதினம் 4-ம் தேதி தொடங்குகிறது. 

இந்த ஆண்டு கோடை காலம் தொடங்குவதற்கு முன்பே வெயில் கொளுத்தி வருகிறது. கடந்த மார்ச் மாதம் முதலே பல மாவட்டங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டி கொளுத்தியது. சென்னை, மதுரை, திருச்சி, வேலூர், திருத்தணி ஆகிய நகரங்களில் அதிக அளவில் வெப்பம் பதிவாகி வருகிறது. தற்போது கடலூர், மதுரை, தஞ்சை, திருச்சி, திருத்தணி ஆகிய இடங்களில் 100 டிகிரியை தாண்டி வெயில் கொளுத்துகிறது. கடந்த ஏப்ரல் மாதத்தில் திருவள்ளூரில் அதிகபட்சமாக 113 டிகிரி வெயில் பதிவானது.

இந்த நிலையில் அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் வருகிற 4-ம் தேதி தொடங்குகிறது. வருகிற 28-ம் தேதி வரை தொடர்ந்து 25 நாட்கள் அக்னி வெயில் நீடிக்கும். இந்த காலக்கட்டத்தில் வெயிலின் தாக்கம் மிகவும் அதிகமாக இருக்கும். பல மாவட்டங்களில் 100 டிகிரியை தாண்டி வெயில் கொளுத்தும். சில மாவட்டங்களில் வெயில் 110 டிகிரியை தாண்டி விடும். இதனால் பகல் நேரத்தில் அனல் காற்று வீசும். இரவு நேரத்தில் புழுக்கம் அதிகமாக கணப்படும்.

அக்னி நட்சத்திர காலக்கட்டத்தில் வருகிற 11-ம் தேதி முதல் 24-ம் தேதி வரை கத்திரி வெயிலின் தாக்கம் மிகவும் அதிகமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.  எனவே பொதுமக்கள் பகல் நேரத்தில் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம். தர்பூசணி, இளநீர், மோர் உள்ளிட்ட பானங்களை பருகுவது உடலுக்கு நல்லது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து