முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஏப்ரல் மாத ஜி.எஸ்.டி. வரி வருவாய் ரூ.1.41 லட்சம் கோடியாக உயர்வு

சனிக்கிழமை, 1 மே 2021      இந்தியா
Image Unavailable

கடந்த ஏப்ரல் மாதத்தில் ஜி.எஸ்.டி வரி வருவாய் ரூ.1.41 லட்சம் கோடியைக் கடந்துள்ளது. கடந்த மார்ச் மாதத்தோடு ஒப்பிடுகையில் 14 சதவீதம் அதிகம் என்று மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

இதுகுறித்து மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

2021, ஏப்ரல் மாதத்தில் நாட்டின் சரக்கு மற்றும் சேவை வரிகள் (ஜி.எஸ்.டி) வருவாய் ரூ.1.41 லட்சம் கோடி வசூலாகியுள்ளது. தொடர்ந்து 7-வது மாதமாக ஜி.எஸ்.டி. வரி வருவாய் ஒரு லட்சம் கோடிக்கும் அதிகமாக வசூலாகி வருகிறது. இதன் மூலம் நாட்டின் பொருளாதாரச் சூழல் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து விடுபட்டு விரைவாக மீட்சி நிலையை நோக்கி வருவது தெளிவாகிறது. போலி பில்கள், பல்வேறு இடங்களில் புள்ளி விவரங்களை ஆழமாக ஆய்வு செய்தல், வருமான வரித்துறை, சுங்கத்துறை இணைந்த திறமையான வரி வசூல் ஆகியவற்றால் கடந்த சில மாதங்களாக வரி வருவாய் அதிகரித்து வருகிறது.

ஏப்ரல் மாதத்தில் ஜி.எஸ்.டி. வரியாக ரூ. ஒரு லட்சத்து 41 ஆயிரத்து 384 கோடி வசூலானது. இதில் மத்திய ஜி.எஸ்.டி வரியாக ரூ.27 ஆயிரத்து 837 கோடியும், மாநில ஜி.எஸ்.டி. வரியாக ரூ.35 ஆயிரத்து 621 கோடியும் வசூலானது. ஒருங்கிணைந்த ஜி.எஸ்.டி. வரியாக ரூ.68 ஆயிரத்து 421 கோடியும் வசூலானது. செஸ் வரியாக ரூ.9 ஆயிரத்து 445 கோடி வசூலானது.

ஜி.எஸ்.டி. வரி 2017-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டபின், 2021, மார்ச் மாதம் ரூ.1.23 லட்சம் கோடி வசூலான தொகைதான் அதிகபட்சமாக இருந்தது. அதை இந்த ஏப்ரல் மாதம் முறியடித்துள்ளது. கடந்த 7 மாதங்களாக ஜி.எஸ்.டி. வரி தொடர்ந்து ஒரு லட்சம் கோடியைக் கடந்து வருவது பொருளாதாரம் வேகமாக மீண்டு வருவதையே காட்டுகிறது. கடந்த மார்ச் மாதம் வசூலான ஜி.எஸ்.டி. வரியை விடக் கடந்த மாதம் வசூலான தொகை 14 சதவீதம் அதிகமாகும். இவ்வாறு நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து