முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பீட்டர் அல்போன்ஸ் மனைவி காலமானார் : இன்று இறுதிச்சடங்கு நடைபெறுகிறது

செவ்வாய்க்கிழமை, 4 மே 2021      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : தமிழக காங்கிரஸ் கமிட்டியின் மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸின் மனைவி ஜெஸிந்தா நேற்று காலமானார்.

தமிழக காங்கிரஸின் மூத்த தலைவரும், முன்னாள் பாராளுமன்ற, சட்டசபை உறுப்பினருமான பீட்டர் அல்போன்ஸின் மனைவி ஜெஸிந்தா பீட்டர் அல்போன்ஸ், உடல்நலக் குறைவு காரணமாக நேற்று காலமானார்.  

இது தொடர்பாக, பீட்டர் அல்போன்ஸ் தன் டுவிட்டர் பக்கத்தில், 46 ஆண்டு காலம் என்னோடு இல்லறம் நடத்தி எனக்கும் என் பிள்ளைகளுக்கும் வழிகாட்டும் ஒளிவிளக்காக இருந்த என் அருமை மனைவி இன்று(நேற்று) இறைவனடி சேர்ந்தார் என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன். 

இறுதிச் சடங்குகள் நாளை(இன்று) 5-5-2021 அன்று மதியம் 12 மணிக்கு சென்னை அண்ணா நகர், புனித லூக்கா ஆலயத்தில் நடைபெறும் எனப் பதிவிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து