Yuvraj-Singh--2021-06-11

Source: provided

2007-ம் ஆண்டு 20 ஓவர் உலக கோப்பை போட்டியில் இந்திய அணிக்கு நான் கேப்டனாக நியமிக்கப்படுவேன் என எதிர்பார்த்தேன் என்று யுவராஜ் சிங் தெரிவித்தார். இதுகுறித்து அவர் தெரிவிக்கையில்., 2007-ம் ஆண்டு 50 ஓவர் உலக கோப்பையில் இருந்து இந்தியா வெளியேறியதால் கடும் கொந்தளிப்புகள் இருந்தது. பின்னர் 2 மாத இங்கிலாந்து சுற்றுப்பயணமும், தென்ஆப்பிரிக்காவுக்கும், அயர்லாந்துக்கும் ஒரு மாத சுற்றுப்பயணமும் இருந்தது.அதன்பின்னர் 20 ஓவர் உலக கோப்பை போட்டி நடந்தது. 

2007-ம் ஆண்டு 20 ஓவர் உலக கோப்பை போட்டியில் இந்திய அணிக்கு நான் கேப்டனாக நியமிக்கப்படுவேன் என்று எதிர்பார்த்தேன். பின்னர் டோனி கேப்டனாக இருப்பார் என்று அறிவிக்கப்பட்டது. யார் கேப்டன் ஆனாலும், அது ராகுல் டிராவிட்டாக இருந்தாலும், கங்குலியாக இருந்தாலும் எதிர்காலத்தில் யாராக இருந்தாலும் நீங்கள் ஆதரவு அளிக்க வேண்டும். நான் அதை செய்தேன் என்றார் யுவ்ராஜ் சிங்.

__________

சுருண்டது மே.இ.தீவுகள் அணி

தென்ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப் பயணம் செய்து இரண்டு டெஸ்ட் போட்டிகள், 5 டி20 போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடுகிறது. இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நேற்று முன்தினம் தொடங்கியது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் பேட்டிங் தேர்வு செய்தது. தென்ஆப்பிரிக்காவின் வேகப்பந்து வீச்சாளர்கள் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் வெஸ்ட் இண்டீஸ் பேட்ஸ்மேன்கள் திணறினர்.

தொடக்க வீரர் பிராத்வைட், ஷாய் ஹோப் ஆகியோர் தலா 15 ரன்கள் எடுத்த நிலையில் அன்ரிச் நோர்ஜோ பந்தில் ஸ்டம்பை பறிகொடுத்தனர். அடுத்து வந்த போனரை 10 ரன்னில் ரபடா வீழ்த்தினார். அதன்பின் வந்தவர்களை லுங்கி நிகிடி சாய்க்க 40.5 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்த வெஸ்ட் இண்டீஸ் 97 ரன்னில் சுருண்டது. ஜேசன் ஹோல்டர் அதிகபட்சமாக 20 ரன்கள் சேர்த்தார். தென்ஆப்பிரிக்கா அணி சார்பில் லுங்கி நிகிடி 13.5 ஓவரில் 19 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 5 விக்கெட் வீழ்த்தினார். அன்ரிச் நோர்ஜோ11 ஓவரில் 35 ரன்கள் விட்டுக்கொடுத்து 4 விக்கெட் வீழ்த்தினார்.

___________

வார்னர், ஸ்டாய்னிஸ் விலகல்

ஐ.பி.எல் போட்டிக்கு ஈடுகொடுக்கும் வகையில் 100 பந்துகள் கொண்ட தி ஹன்ட்ரட் கிரிக்கெட் போட்டியை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிமுகம் செய்கிறது. ஆடவர், மகளிர் என இரு தரப்பினருக்கும் நடத்தப்படும் இந்தப் போட்டியில் தலா 8 அணிகள் கலந்துகொள்ளவுள்ளன. 2003-ல் டிவெண்டி20 கப் என்கிற டி20 போட்டியை இங்கிலாந்து அறிமுகப்படுத்தியது. 

அதன் அடுத்தக்கட்டமாக 100 பந்துகள் கொண்ட இப்போட்டியைக் கடந்த வருடம் ஜூலை மாதம் அறிமுகம் செய்வதாகத் திட்டமிடப்பட்டிருந்தது. கரோனா அச்சுறுத்தல் காரணமாக இப்போட்டி ஒத்திவைக்கப்பட்டது. இந்த வருட தி ஹன்ட்ரட் போட்டி, ஜூலை 21 முதல் ஆகஸ்ட் 21 வரை நடைபெறவுள்ளது. சதர்ன் பிரேவ் அணிக்குத் தேர்வான ஆஸி. வீரர்கள் டேவிட் வார்னர், ஸ்டாய்னிஸ் ஆகியோர் தி ஹன்ட்ரட் போட்டியிலிருந்து விலகியுள்ளார்கள். 

____________

சேத்தன் சக்காரியா உருக்கம்

ஐ.பி.எல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடிய இளம் வேகப்பந்துவீச்சாளர் சேத்தன் சக்காரியா பலரது கவனத்தையும் பெற்றார். மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த சக்காரியா அண்மையில் கொரோனா பாதித்ததன் காரணமாக தன் தந்தையை இழந்தார். இப்போது இலங்கை செல்லும் இந்திய ஒரு கிரிக்கெட் அணிக்கு சக்காரியா தேர்வாகியிருக்கிறார்.

இது குறித்து சக்காரியா தெரிவிக்கையில்., "நான் இந்திய அணிக்காக விளையாட வேண்டும் என்பது அப்பாவின் கனவு. இப்போது அப்பா இருந்திருந்தால் நிச்சயம் மகிழ்ந்திருப்பார். கடந்த ஒரு ஆண்டு காலமாக வாழ்க்கையில் பல்வேறு ஏற்ற இறக்கங்களை சந்தித்துவிட்டேன். இதுவரை எனக்கு சில மாதங்கள் மிகவும் உணர்ச்சிகரமாக இருந்துள்ளது" என்றார்.

___________

பாக். முன்னாள் வீரர் விருப்பம்

ஓய்வு பெற்ற  பாகிஸ்தான் ஆல்ரவுண்டர் யாசிர் அராபத், டோனியின் தலைமைத்துவ பண்புகளை வானளாவ புழந்து பேசியுள்ளார். டோனி போன்ற ஒரு கேப்டன் இருந்திருந்தால் பாகிஸ்தான் அணி பெரிய அளவில் பயனடைந்திருக்கும் என்கிறார் யாசிர் அராபத். டோனி வீரர்களின் திறமையைத் துல்லியமாகக் கணித்து அவர்களிடமிருந்து சிறந்த ஆட்டத்தை வெளிக்கொண்டு வரும் ஒரு சிறந்த கேட்பன் கூறுகள் கொண்டவர் என்கிறார் யாசிர் அராபத். 

 

தற்போதைய பாகிஸ்தான் அணி திறமையானது, ஆனால் டோனி போன்ற கேப்டன் தான் இவர்களுக்கு ஊக்கமளிக்க முடியும் என்று நினைக்கிறார் யாசிர் அராபத்.“எம்.எஸ். டோனி இப்போது விளையாடவில்லை. அவர் மட்டும் ஓய்வு பெறாமல் இருந்திருந்தால் நான் அவரை பாகிஸ்தன் அணிக்கு கேப்டனாகத் தேர்வு செய்திருப்பேன் என்று யாசிர் அராபத் தெரிவித்துள்ளார்.


Egg Paniyaram with Moringa leaves | Healthy snack ideas


சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் பாகற்காய்


மூல நோயை குணப்படுத்த எளிய மருத்துவம் | Home Remedies for piles |P. புஷ்பமாரி சித்த மருத்துவர்


இலவச சட்ட உதவி பெறுவது எப்படி? | How To Get Free Aid| Right to Free Legal Aid


Mr & Mrs Short Film | Tamil Comedy Short Film |Short Film in Tamil | Short Film Tamil ComedyRhyme time with Shanaya - Children's Song/Rhymes for Babies, Toddlers & Kidsகிலோமீட்டருக்கு 10 பைசாவில் 400 கிலோ எடையை இழுக்கும் எலக்ட்ரிக் பைக்|Komaki CAT 2.O Reviewஇன்சுலினை சுரக்கவைத்து நீரழிவு நோயை கட்டுப்படுத்தும் உட்கட்டாசனம | Utkatasana Benefits in Tamil | EP-7அதிமுக சாதி கட்சியாக மாறிவிட்டதா? KC.பழனிச்சாமி குற்றச்சாட்டு | K C Palanisamy Exclusive Interview


இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து