முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

'பறக்கும் சீக்கியர்' என அழைக்கப்பட்ட முன்னாள் தடகள வீரர்'மில்கா சிங்' காலமானார்: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் புகழஞ்சலி

சனிக்கிழமை, 19 ஜூன் 2021      விளையாட்டு
Image Unavailable

Source: provided

புதுடெல்லி : பறக்கும் சீக்கியர் என அழைக்கப்படும் முன்னாள் இந்திய தடகள வீரர் மில்கா சிங் (91) காலமானார். அவருக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் புகழஞ்சலி செலுத்தியுள்ளனர்.

தீவிர சிகிச்சை... 

கடந்த மாதம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மில்கா சிங், பஞ்சாப் மாநிலம் மொகாலியில் இருக்கும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலை சீராக இருந்ததால் குடும்பத்தினர் கோரிக்கையை ஏற்று வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இந்த மாத தொடக்கத்தில் மில்கா சிங்குக்கு திடீரென ஆக்சிஜன் அளவு குறைந்ததால் சண்டிகரில் உள்ள மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி அமைப்பின் கொரோனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு ஐசியூவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

மனைவி மரணம்...

இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மில்கா சிங் நேற்று முன்தினம் இரவு 11.30 மணியளவில் சிகிச்சை பலனின்றி காலமானார் என அறிவிக்கப்பட்டது. கடந்த சில நாள்களுக்கு முன்பு மில்கா சிங்கின் மனைவி நிர்மல் கவுர் கொரோனா தொற்றால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். நிர்மல் கவுர் இந்திய மகளிர் வாலிபால் அணியின் கேப்டனாக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. மில்கா சிங் இந்தியா சார்பில் 1956, 1960, 1964 ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்றவர்.

4-வது இடம்... 

அதில் 1960-ம் ஆண்டு ரோம் நகரில் நடைபெற்ற ஒலிம்பிக்கில் மயிரிழையில் ஒலிம்பிக் பதக்கத்தை நழுவவிட்டு, 400 மீட்டர் ஒட்டப் பந்தயத்தில் 4-வது இடம் பிடித்தார். "இந்தியாவின் பறக்கும் மனிதர்" என புகழப்படும் மில்கா சிங்கின் மறைவுக்கு தலைவர்கள் பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

BOX - 1

பிரதமர் மோடி இரங்கல்

மில்கா சிங் மறைவுக்கு பிரதமர் மோடி தன்னுடைய ட்விட்டர் பதிவில் தெரிவித்திருப்பதாவது., "தேசத்தின் கற்பனையை கைப்பற்றிய மற்றும் இந்தியர்களின் இதயங்களில் சிறப்பு இடத்தைப் பெற்ற ஒரு மகத்தான விளையாட்டு வீரரை நாங்கள் இழந்துவிட்டோம். விளையாட்டில் அவரது எழுச்சியூட்டும் ஆளுமை மில்லியன் கணக்கானவர்களைப்போல் தன்னையும் நேசிக்க வைத்தது"

"கடந்த சில நாள்களுக்கு முன்பதான் மில்கா சிங்கிடம் தொலைப்பேசியில் பேசினேன். ஆனால் அதுதான் அவருடன் நான் பேசும் இறுதி உரையாடல் என அறிந்திருக்கவில்லை. நாட்டில் வளர்ந்து வரும் அத்தனை தடகள வீரர்களுக்கும் மில்கா சிங்கின் வாழ்க்கை ஒரு முன்னுதாரணமாகவும், உத்வேகம் அளிக்க கூடியதாகவும் இருக்கும். அவரை இழந்து வாடும் குடும்பத்தினர் மற்றும் அனைவருக்கும் என்னுடைய இரங்கல்கள்" என மோடி தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து