முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முதலமைச்சருக்கு ஆலோசனை வழங்க நோபல் பரிசுபெற்ற நிபுணர் உள்பட 5 பேர் கொண்ட குழு

திங்கட்கிழமை, 21 ஜூன் 2021      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : தமிழக சட்டசபையின் 16-வது கூட்டத்தொடர் நேற்று காலை தொடங்கியது. கொரோனா தொற்று காரணமாக கலைவாணர் அரங்கின் மூன்றாம் தளத்தில் சபை நடக்கிறது. முதல் நாள் கவர்னர் உரையுடன் தொடங்கியது. சபைக்கு முன்னரே முதல்-அமைச்சர் உள்ளிட்ட அனைத்து உறுப்பினர்களும் வந்துவிட, பின்னர் சபைக்கு வந்த கவர்னரை சபாநாயகர் அப்பாவு வரவேற்று சபைக்குள் அழைத்து வந்தார். 

பின்னர் கவர்னர் உரையை வாசித்தார். அதில் பல்வேறு சிறப்பம்சங்கள், அரசின் கொள்கை குறிப்புகள், எதிர்கால திட்டங்கள் இருந்தாலும் முக்கியமான பல அம்சங்கள் இருந்தன. 

அதில் முக்கிய அம்சமாக தமிழகத்தின் பொருளாதாரத்தை மேம்படுத்த முதல்-அமைச்சருக்கு ஆலோசனை வழங்க முதல்-அமைச்சருக்கான பொருளாதார ஆலோசனைக் குழு ஒன்று உருவாக்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்தக் குழுவில் உலகப் புகழ்பெற்ற பொருளாதார நிபுணர்கள் இருப்பார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதுகுறித்து கவர்னர் உரையில் கூறி இருப்பதாவது:- 

வரும் சில ஆண்டுகளுக்கு மட்டும் கிடைக்கக்கூடிய மனித வளத்தின் பலன்களை முழுமையாகப் பயன்படுத்தி விரைவான பொருளாதார வளர்ச்சி பெற முற்படுவோம். இந்த வளர்ச்சி இலக்குகளை எட்டுவதற்கான பாதை அமைத்து தமிழக முதல்-அமைச்சருக்கு ஆலோசனை கூற பொருளாதார ஆலோசனைக் குழு ஒன்றை அமைக்க இந்த அரசு முடிவெடுத்துள்ளது. இக்குழுவின் பரிந்துரை அடிப்படையில் மாநிலத்தின் பொருளாதாரத்தை மீண்டும் எழுச்சிபெறச் செய்து பொருளாதாரத்தின் பயன்களை அனைவரும் பெற இந்த அரசு உறுதி செய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

1. இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன், 

2. நோபல் பரிசுபெற்ற அமெரிக்கப் பொருளாதார நிபுணர் எஸ்தர் டப்ளோ, 

3. மத்திய அரசின் முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன், 

4. ராஞ்சி பல்கலைக்கழக டெல்லி ஸ்கூல் ஆப் எகனாமிக்ஸ் ஜீன் ட்ரெஸ், 

5. மத்திய அரசின் முன்னாள் நிதித்துறைச் செயலர் நாராயணன் ஆகிய ஐவர் இந்தக் குழுவில் அங்கம் வகிப்பர். 

இவர்கள் பணிப் பொருளாதார நிலையை ஆராய்ந்து, பொருளாதாரத்தை மேம்படுத்த முதல்-அமைச்சருக்கு ஆலோசனைகளை அளிப்பார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து