Idhayam Matrimony

நியூசிலாந்தைவீழ்த்த அதிக ரன்களை எடுத்து முன்னிலை பெற வேண்டும்: 4 விக்கெட்களை வீழ்த்திய ஷமி பேட்டி

புதன்கிழமை, 23 ஜூன் 2021      விளையாட்டு
Image Unavailable

Source: provided

சவுதம்ப்டன் : நியூசிலாந்தை வீழ்த்த நாங்கள் அதிக ரன்கள் முன்னிலை பெற வேண்டும் என இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஷமி கூறியுள்ளார். 

1-வது, 2-வது நாள்...

சௌதாம்டனில் கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கிய இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டத்தின் முதல் நாள், மழை காரணமாக முற்றிலுமாக கைவிடப்பட்டது. 2-வது நாளில் இந்தியா 3 விக்கெட் இழப்புக்கு 146 ரன்கள் எடுக்க, வெளிச்சமின்மையால் ஆட்டம் முன்னதாக முடிக்கப்பட்டது. 

மழை காரணமாக... 

சனிக்கிழமையன்று இந்தியா 89 ஓவா்களில் 217 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அன்றைய தினமும் வெளிச்சமின்மை காரணமாக ஆட்டம் முன்னதாகவே முடிக்கப்பட்டபோது நியூசிலாந்து முதல் இன்னிங்ஸில் 2 விக்கெட் இழப்புக்கு 101 ரன்கள் எடுத்திருந்தது. 4-ம் நாள் ஆட்டம் மழை காரணமாக ஒரு பந்துகூட வீசப்படாமல் கைவிடப்பட்டது.

முதல் இன்னிங்ஸ்... 

நியூசிலாந்தை முதல் இன்னிங்ஸில் 249 ரன்களுக்கு கட்டுப்படுத்தியது இந்தியா. அந்த அணியின் பேட்டிங் வரிசையை ஷமி, இஷாந்த் தங்களது வேகத்தால் சரித்தனா். நியூசிலாந்தின் முக்கிய விக்கெட்டாக இருந்த கேன் வில்லியம்சனை 49 ரன்களில் இஷாந்த் வீழ்த்தினார். 

நியூசி. முன்னிலை... 

முதல் இன்னிங்ஸில் நியூசி. அணி 32 ரன்கள் முன்னிலை பெற்றது. ஷமி நான்கு விக்கெட்டுகளையும் இஷாந்த் சர்மா 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்கள். 5-ம் நாள் இறுதியில் இந்திய அணி 2-வது இன்னிங்ஸில் 30 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 64 ரன்கள் எடுத்துள்ளது. 8 விக்கெட்டுகள் மீதமுள்ள நிலையில் இந்திய அணி 32 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. 

மழை காரணமாகக் கூடுதல் நாளான நேற்று இந்த ஆட்டம் தொடர்ந்தது. கடைசி நாளில் இந்திய அணி வெற்றி பெறுவதற்கான சாத்தியங்கள் குறித்து இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஷமி கூறியதாவது:-

அதிக ரன்கள்... 

நாங்கள் முடிந்தளவு அதிக ரன்கள் எடுத்து அவர்களை எப்போது பேட்டிங் செய்யச் சொல்லவேண்டும் எனப் பார்க்கவேண்டும். இங்கிலாந்தில் உள்ள சூழலில் எதுவும் சாத்தியம். நியூசிலாந்தின் 10 விக்கெட்டுகளையும் எடுக்க கால அவகாசம் தேவை. இதற்குச் சரியான திட்டங்கள் வேண்டும். அதற்கு முதலில் நாங்கள் போதுமான ரன்களை எடுக்கவேண்டும் என்றார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து