முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஈராக்கில் வெடிகுண்டு தாக்குதல் 35 பேர் பலி..60 பேர் படுகாயம்

செவ்வாய்க்கிழமை, 20 ஜூலை 2021      உலகம்
Image Unavailable

Source: provided

பாக்தாத்: ஈராக் தலைநகர் பாக்தாத்தில் உள்ள சந்தையில் நிகழ்த்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் 35-க்கும் அதிகமானோர் பலியாகியுள்ளனர். காயமடைந்தவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.

ஈராக்கில் பக்ரீத் பண்டிகைக்காக விடுமுறை அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து முக்கிய நகரங்களில் பொதுமக்கள் ஆடைகள், உணவு பொருட்களை வாங்க குவிந்து வருகின்றனர். ஈராக் தலைநகர் பாக்தாத்தில் உள்ள சடர் நகரில் உள்ள சந்தையில் மாலையில் பொருட்கள் வாங்க ஏராளமானவர்கள் கூடியிருந்தனர். அப்போது நிகழ்த்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் நிகழ்விடத்திலேயே 35 பேர் பலியாகினர்.

காயங்களுடன் மீட்கப்பட்ட 60-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். வெடிகுண்டு தாக்குதலில் குழந்தைகள், பெண்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. கடைகளும் தரைமட்டமாகியுள்ளன. பக்ரீத் காலத்தில் நிகழ்த்தப்பட்ட இந்த தாக்குதல் மிக கொடூரமானது என்று ஈராக் அதிபர் கண்டனம் தெரிவித்துள்ளார். 

இந்த வெடிகுண்டு தாக்குதலுக்கு எந்த அமைப்பும் பொறுப்பேற்காத நிலையில், பாதுகாப்பு படையினர் விசாரணையை தொடங்கியுள்ளனர். தற்போது தாக்குதல் நடத்தப்பட்ட சந்தையில் நடப்பாண்டில் இதற்கு முன்னர் இருமுறை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து