என் மொபைல் கேமராவை டேப் போட்டு ஒட்டி வைத்திருக்கிறேன் யாரும் ஒட்டு கேட்க முடியாது: மம்தா பேச்சு

dhamu-06

Source: provided

கொல்கத்தா:  தமது செல்போனின் கேமராவை டேப் போட்டு ஒட்டி வைத்திருப்பதாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

திரிணாமுல் காங்கிரஸ் கட்சி சார்பில் கடைபிடிக்கப்பட்டு வரும் தியாகிகள் தினத்தையொட்டி நாடு முழுவதும் உள்ள மேற்கு வங்க மக்களிடம் காணொலி மூலம் மம்தா பானர்ஜி  உரையாற்றினார்.  அப்போது அவர் கூறியதாவது:-

ஊடகம், நீதித்துறை, தேர்தல் ஆணையம் ஆகியவற்றின் மூலம் தான் ஜனநாயகத்தை உருவாக்க முடியும். இவை மூன்றையும் பெகாசஸ் கைப்பற்றியுள்ளது. பெகாசஸ் மென்பொருள் மிகவும் ஆபத்தானது. இந்த விவகாரத்தால் சரத் பவார், டெல்லி முதல்வர், கோவா முதல்வர்  ஆகியோரிடம் என்னால் பேச முடியாது. கண்ணுக்கு தெரியாத பொருளை என் மொபைலில்  பொருத்தியுள்ளார்கள். 

செல்போன் ஆடியோ வீடியோ மூலமாக ஒட்டுக் கேட்கப்படுவதால் எனது செல்போனின் கேமராவை டேப் போட்டு மூடி வைத்திருக்கிறேன் என  தனது போனை உயர்த்திக் காட்டியபடி கூறினார். மேலும் வரும்  27 அல்லது 28-ம் தேதிகளில் டெல்லிக்கு செல்ல உள்ளேன். எதிர்க்கட்சிகள் கூட்டம் நடந்தால் அதில் கலந்து கொள்வேன் என கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ

View all comments

வாசகர் கருத்து