அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் தகுதி குறைவான பேராசியர்கள் நீக்கப்படுவார்கள்: அமைச்சர் பொன்முடி தகவல்

Ponmudi 2021 07 01 0

Source: provided

விழுப்புரம்: அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் தகுதிக்குறைவான பேராசியர்கள் நீக்கப்படுவார்கள் என்று உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று ஊரக வளர்ச்சிப் பணிகள் குறித்து ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரியகருப்பன், உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி உள்ளிட்டோர், கஞ்சனூர், வெங்கந்தூர், வீரமூர், மங்களபுரம், கக்கனூர், காணை ஆகிய கிராமங்களில், புதிய பணிகளைத் தொடங்கி வைத்தும், முடிக்கப்பட்ட பணிகளைத் திறந்தும் வைத்தனர்.

இதைத் தொடர்ந்து, கக்கனூர் கிராமத்தில் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி செய்தியாளர்களைச் சந்தித்தார். 

அண்ணாமலை பல்கலைக்கழக ஊழலை விசாரிக்க கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. அரசின் கட்டுப்பாட்டில் இது வந்து விட்டால் எவ்விதக் குற்றச்சாட்டும் இல்லாத அளவுக்கு இந்த அரசு செயல்படும். அரசு மருத்துவக் கல்லூரிகளில் வசூலிக்கப்படும் கட்டணமே அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

தகுதிக் குறைவானவர்களாக நியமிக்கப்பட்ட பேராசியர்கள் குறித்து குழு அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் நீக்கப்பட்டு முறையாக சீனியாரிட்டி அடிப்படையில் நியமிக்கப்படுவார்கள் எனச் சொல்லியுள்ளோம். முதலில் டி.ஆர்.பி.யில் நேர்முகத் தேர்வு நடத்தப்படவில்லை. கவுரவப் பேராசியர்களை நியமிக்க கமிட்டி போடப்பட்டதே தவிர, டி.ஆர்.பி.யோ, டி.என்.பி.எஸ்.சி.யோ நியமிக்க வேண்டும் என்று செய்யவில்லை. அதனால் அந்த நியமனத்தையும் நிறுத்தி வைத்துள்ளோம். இவையெல்லாம் பட்ஜெட் வரும்போது அறிவிக்கப்படும்.  இவ்வாறு அமைச்சர் பொன்முடி தெரிவித்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ

View all comments

வாசகர் கருத்து