தங்கம் விலை சவரன் ரூ. 168 குறைந்தது

Gold 2021 07 01

Source: provided

சென்னை : சென்னையில் நேற்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.168 குறைந்து, ஒரு சவரன் ரூ.36,384-க்கு விற்பனையானது. 

தங்கம் விலையில் கடந்த மாதம் தொடர்ந்து சரிவு காணப்பட்டு பவுன் ரூ.36 ஆயிரத்துக்கு கீழ் வந்தது.  ஆனால் இந்த மாத தொடக்கத்தில் இருந்து விலை உயர்ந்ததால் தங்கம் பவுன் மீண்டும் ரூ.36 ஆயிரத்தை தாண்டியது.  அதன்பின் விலையில் ஏற்றத்தாழ்வு காணப்பட்டு வந்த நிலையில் கடந்த 3 நாட்களாக விலை தொடர்ந்து உயர்ந்தது.

இந்த நிலையில் தங்கம் விலை நேற்று குறைந்தது. சென்னையில் நேற்று காலை ஆபரண தங்கத்தின் விலையில் பவுனுக்கு ரூ.168 குறைந்து ரூ.36 ஆயிரத்து 384-க்கு விற்பனை செய்யப்பட்டது.  ஒரு கிராம் ரூ.4 ஆயிரத்து 548 ஆக இருந்தது.  வெள்ளி கிலோவுக்கு ரூ.300 குறைந்து ரூ.73 ஆயிரமாக இருந்தது. ஒரு கிராம் வெள்ளி ரூ.73-க்கு விற்பனையானது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ

View all comments

வாசகர் கருத்து