முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சுதந்திர தின விழாவில் பங்கேற்க ஒலிம்பிக் வீரர்களுக்கு அழைப்பு

புதன்கிழமை, 4 ஆகஸ்ட் 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

புதுடெல்லி: டெல்லி செங்கோட்டை சுதந்திர தின விழாவில் பங்கேற்க ஒலிம்பிக் வீரர்களுக்கு அழைப்பு விடுக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

127 வீரர்கள்... 

டோக்கியோவில் நடந்து வரும் ஒலிம்பிக் போட்டியில் இந்தியா சார்பில் 127 வீரர்கள் பங்கேற்றுள்ளனர். இதுவரை 3 பதக்கங்கள் கிடைத்துள்ளன. மேலும், பதக்கங்கள் கிடைக்க வாய்ப்புள்ளது. ஒலிம்பிக்கில் கலந்து கொண்ட வீரர்களை ஜப்பான் புறப்பட்டு செல்வதற்கு முன்பாக பிரதமர் நரேந்திரமோடி அழைத்து வாழ்த்து தெரிவித்தார். அடுத்ததாக அவர்கள் ஊர் திரும்பியதும் இரவு விருந்து அளிக்க இருக்கிறார்.

பங்கேற்க அழைப்பு...

ஒலிம்பிக் வீரர்களை கவுரவப்படுத்தும் வகையில் டெல்லி செங்கோட்டையில் நடைபெறும் சுதந்திரதின விழாவில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட இருக்கிறது. அரசு நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பிரதமர் நரேந்திரமோடி, ஒலிம்பிக் வீரர்களை வெகுவாக பாராட்டினார்.

சிறப்பான பயிற்சி...

இந்திய வீரர்கள் மிகத் திறமையாக செயல்பட்டு புதிய அடையாளத்தை உருவாக்கி இருக்கிறார்கள். குறிப்பிட்ட வீரர்களை தேர்வு செய்து அவர்களுக்கு தேவையான வசதிகள் செய்து கொடுத்து சிறப்பான பயிற்சிக்கு ஏற்பாடு செய்யப்படும்.

பிரதமர் பாராட்டு...

கொரோனா பாதிப்பால் பிரச்சனைகள் இருந்த நிலையில் நமது வீரர்கள் சிறப்பாக பயிற்சியில் ஈடுபட்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தி இருக்கிறார்கள். இதற்காக அவர்களுக்கு பாராட்டு தெரிவித்துக் கொள்கிறேன். புதிதாக பல விளையாட்டுகளில் முதன்முறையாக இந்திய வீரர்கள் தகுதி பெற்று ஒலிம்பிக்கில் பங்கேற்று இருக்கிறார்கள். இது பாராட்டுக்குரியது என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago
View all comments

வாசகர் கருத்து