நீட் விலக்கு மசோதாவுக்கு ஆதரவு : எடப்பாடிக்கு மு.க.ஸ்டாலின் நன்றி

Stalin 2020 07-18

நீட் விலக்கு மசோதாவுக்கு ஆதரவு தெரிவித்த எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்தார்.

சட்டசபையிலிருந்து வெளிநடப்பு செய்த பின் பேட்டி அளித்த எதிர்க்கட்சி தலைவர்  நீடதேர்வு விலக்கு கோரும் மசோதவுக்கு அ.தி.மு.க ஆதரவு அளிக்கும் என கூறினர்.

சட்டசபையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசும் போது  அ.தி.மு.க. ஆட்சியில் எப்படி நீட் சட்ட முன்வடிவு கொண்டுவரப்பட்டது ? நாங்கள் எப்படி கொண்டு வந்துள்ளோம் என பாருங்கள் என கூறினார்.

எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி இதற்கு பதில் அளிக்கும் போது தி.மு.க. அரசின் சட்ட முன்வடிவை படித்து பார்த்தோம்; நாங்கள் கொண்டுவந்த சட்ட முன்வடிவாகத்தான் உள்ளது. நீட் தேர்வுக்கு நிரந்தர விலக்கு பெறும் சட்டமசோதாவுக்கு அ.தி.மு.க. ஆதரவு அளிக்கிரது. நீட் தேர்வுக்கு விலக்கு பெறும் சட்ட முன் வடிவை வரவேற்கிறோம்  என கூறினார்.

நீட் மசோதாவுக்கு அ.தி.மு.க. பா.ம.க. ஆதரவு தெரிவித்த நிலையில் நிறைவேறியது.

மு.க.ஸ்டாலின் கொண்டுவந்த  நீட் தேர்வு விலக்கு சட்ட மசோதா சட்டமன்றத்தில் ஒருமனதாக நிறைவேறியது. 

 

நீட் விலக்கு மசோதாவுக்கு ஆதரவு தெரிவித்த எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ

View all comments

வாசகர் கருத்து