முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பஞ்சாப் புதிய முதல்வராக சரண்ஜித் சிங் சன்னி தேர்வு

ஞாயிற்றுக்கிழமை, 19 செப்டம்பர் 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

அமிர்தசரஸ்: பஞ்சாப் மாநிலத்தின் புதிய முதல்வராக  சரண்ஜித் சிங் சன்னி தேர்வு செய்யப்பட்டுள்ளதாக காங்கிரஸ் அறிவித்துள்ளது.

பஞ்சாப் மாநிலத்தில் முதல்வர்  கேப்டன் அமரிந்தர் சிங்குக்கும், அவரது அமைச்சரவையில் இடம் பெற்றிருந்து, பின்னர் பதவி விலகிய முன்னாள் கிரிக்கெட் வீரர் நவ்ஜோத்சிங் சித்துவுக்கும் இடையே நீண்டகாலமாக மோதல் போக்கு நிலவி வந்தது.  அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடக்க உள்ள நிலையில், சமீபத்தில் நவ்ஜோத்சிங் சித்துவை மாநில காங்கிரஸ் தலைவராக கட்சி மேலிடம் நியமித்தது. இது அமரிந்தர் சிங்குக்கு  கசப்பு உணர்ச்சியை ஏற்படுத்தியது.  இதனால் அவருக்கும், நவ்ஜோத் சிங் சித்துவுக்கும் இடையேயான மோதல் தொடர்கதையானது. இந்த நிலையில், பஞ்சாப் முதல்வர் பொறுப்பில் இருந்து அமரிந்தர் சிங் நேற்று முன்தினம் பதவி விலகினார்.  

இதையடுத்து, பஞ்சாப் மாநிலத்தில் அடுத்த முதல் மந்திரி யார்? என்பது குறித்து கட்சி மேலிடம் தீவிர ஆலோசனை நடத்தி வந்தது. இந்த நிலையில், பஞ்சாபின் அடுத்த முதல்வராக சரண் ஜித் சன்னி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இந்தநிலையில் முதல்வரை தவிர இரண்டு பேரை துணை முதல்வராக நியமிக்கவும் பரிசீலிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இவர்களில் கேபினட் அமைச்சர் தேரா பாபா நானக், மாநில காங்கிரஸ் தலைவர் சுனில் ஜகார், பிரதாப் சிங் பஜ்வா, மறைந்த முன்னாள் முதல்வர் பியாந்த் சிங்கின் பேரன் ரவ்னீத் சிங் ஆகியோர் பெயர்களும் பரிசீலனையில் இருப்பதாக கூறப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago
View all comments

வாசகர் கருத்து