முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சேவாக் முகத்தில் கரிபூசிய சி.எஸ்.கே.

திங்கட்கிழமை, 20 செப்டம்பர் 2021      விளையாட்டு
Image Unavailable

Source: provided

ஐபிஎல் 2021 தொடரின் 30 லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பேட் செய்து 25 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து அதிர்ச்சி சரிவு கண்டதயடுத்து கடுமையான குசும்பு பிடித்த சேவாக் ட்விட்டரில் கிண்டலில் இறங்க பிறகு சென்னை வெற்றிபெற்று அவர் முகத்தில் கரிபூசியது, நெட்டிசன்கள் சேவாக் கேலிக்கு ரியாக்ட் செய்துள்ளனர்.

இந்நிலையில் 7/3 என்று சிஎஸ்கே இருந்த நிலையில் சேவாக் கடும் கிண்டலாக என்னப்பா இது கிரிக்கெட்டா, ஹாக்கியா என்று கேலி ட்வீட் செய்தார். இதனையடுத்து நெட்டிசன்கள் பலரும் அவரை பிடித்து வாங்கி விட்டனர். சேவாக் உங்கள் மரியாதையை இழந்து விடாதீர்கள் என்று ஒரு நெட்டிசன் எச்சரித்தார்.

---------------

ஏலம் விடப்பட்ட நீரஜ்-ன் ஈட்டி 

பிரதமர் நரேந்திர மோடிக்கு கிடைத்த பரிசுகள் மற்றும் நினைவுப் பொருட்கள் மின்னணு முறையில் ஏலம் விடப்பட்டுள்ளன. அக்டோபர் 7 ஆம் தேதி வரை நடைபெறும் இந்த ஏலத்தில் பிரதமருக்கு ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் வீரர்கள் அளித்த ஈட்டி, பாக்சிங் கிளவ் மற்றும் அயோத்தி ராமர் கோயிலின் மாதிரி வடிவம் உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன. 

பொதுமக்கள் இந்த ஏலத்தில் பங்கேற்று, கங்கை நதியை தூய்மைபடுத்தும் திட்டத்துக்கு உதவுமாறு, பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். ஆன்லைன் மூலமாக ஏலம் தொடங்கியுள்ள நிலையில், நீரஜ் சோப்ரா பயன்படுத்திய ஈட்டி, லவ்லினா பயன்படுத்திய பாக்சிங் கிளவ் ஆகியலை தலா 10 கோடி ரூபாய்க்கு ஏலம் கேட்கப்பட்டுள்ளன.

___________

விற்பனைக்கு வந்த கோலியின் கார் 

சச்சின் டெண்டுல்கர் ஒரு கார் பிரியர் பலரக கார்களை வாங்கி ஓட்டி அழகுபார்ப்பவர், கிரிக்கெட் வீரர் விராட் கோலியும் ஒரு கார் விரும்பிதான். அவரது ஆரஞ்சு நிற ஆடம்பர லம்போகினி சொகுசு கார் இப்போது கொச்சியில் ரூ.1.35 கோடிக்கு விற்பனைக்கு வந்துள்ளது. 

ஒரு ஆட்டோமொபைல் வெப்சைட்டில் கண்ட விராட் கோலி இந்த ஆரஞ்சு லம்போகினியை 2015-ல் வாங்கினார். ஆனால் கொஞ்ச நாட்களுக்குப் பிறகு இந்தக் காரை விற்று விட்டார். புதுச்சேரியில் பதிவு செய்யப்பட்ட இந்த கார் இப்போது கொச்சியில் உள்ள ராயல் ட்ரைவ் என்ற பழைய ஆடம்பர கார் வாங்கி விற்பனை செய்யும் டீலரின் ஷோ ரூமில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது.

___________

ரெய்னாவை கிண்டல் செய்த ஸ்டெய்ன் 

மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் ரெய்னா 6 பந்துகளில் 4 ரன்கள் எடுத்து போல்ட் பந்தில் ராகுல் சாகரிடம் கேட்ச் ஆனார். அதாவது ஷார்ட் பிட்ச் பந்துன்னா ரெய்னாவுக்கு பயம் என்பது போல் ஒதுங்குகிறார், போல்ட் வீசிய இந்தப் பந்துக்கு ஒதுங்கினார். பிறகு மட்டையை வீசினார் பந்தில் பட்டு மட்டை இரண்டாக உடைந்தது. பந்து பாயிண்ட் பகுதியில் கேட்ச் ஆனது. 

இந்நிலையில் டேல் ஸ்டெய்ன் கூறும்போது, “அவர் ஒன்றையும் விரும்பவில்லை. அந்தத் தருணத்தில் ரெய்னா ஸ்கூல் பாய் கிரிக்கெட் வீரர் போல் இருந்தார். ஒரு சர்வதேச கிரிக்கெட் வீரர் இப்படி ஆடுவாரா என்று நான் உண்மையில் நம்பவில்லை. தர்மசங்கடமாக மட்டையும் உடைந்து போய் பரிதாபமாக அவர் வெளியேறினார். பந்து சிக்சருக்குப் போயிருந்தால் நான் இதைக் கூறப்போவதில்லை. ஆனால் நடந்தது என்ன மட்டை உடைந்து போய் கேட்ச் ஆகி பாவம்” என்றார் டேல் ஸ்டெய்ன்.

___________

சவுரவ் திவாரிக்கு கரீம் அட்வைஸ்

முன்னாள் விக்கெட் கீப்பர் சபா கரீம் சவுரவ் திவாரி பற்றிக் கூறும்போது, “நாங்கள் எந்த மாற்றத்தையும் பார்க்கவில்லை, சவுரவ் திவாரியிடம் திறமை இருக்கிறது. அவர் ஆட ஆரம்பித்தவுடனேயே அதுதெரிந்தது. ஒன்றை சொல்லி விடுவது நல்லது, அவர் டயட்டில் சரியாக இருக்க வேண்டும். 

பிட்னஸ் முக்கியம். சர்வதேச கிரிக்கெட்டராக ஆக வேண்டுமெனில் உடல் பிட்னெஸ்தான் மிக முக்கியம், டயட் கவனம் வேண்டும். அவரைப் பார்க்க பாவமாகவே இருந்த்து, ஆனால் மும்பை அணிக்கு அவரால் ஆட முடிகிறதே அது அவருக்கு பெரிய விஷயம். டீசண்டாகவே ஆடினார்” என்கிறார் சபா கரீம்.

_______________

ராஜஸ்தான் கேப்டன் வேதனை

“டி20 உலகக்கோப்பை தேர்வு முடிந்து விட்டது, இது ஒரு சவுகரியம். அது ஒரு பெரிய கவனப்பிறழ்வாக இனி இருக்காது. எனவே நான் ஐபிஎல் கிரிக்கெட்டில் முழு ஆற்றலையும் கொண்டு வர முடியும். உலகக்கோப்பை அணியில் தேர்வு ஆகாதது உண்மையில் ஏமாற்றம்தான். 

எந்த ஒருவருக்கும் உலகக்கோப்பைக்காக இந்தியாவுக்கு ஆடுவதுதான் கனவாக இருக்க முடியும். நானும் எதிர்பார்த்தேன். எனினும் அது என் கையில் இல்லை. எனவே நம் கட்டுப்பாட்டில் எது இருக்கிறதோ அதை ஒழுங்காகச் செய்ய வேண்டும். இந்தச் சிந்தனை முதிர்ச்சி அவசியம் என்று தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து