90 சதவீதம் பேருக்கு முதல் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது: கேரள அமைச்சர் தகவல்

Veena-George 2021 07 13

Source: provided

திருவனந்தபுரம் : கேரளாவில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களில் 90 சதவீதம் பேருக்கு முதல் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என, மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் கோவிட் பெருந்தொற்றின் பரவலைக் கட்டுப்படுத்த தடுப்பூசி இயக்கம் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இருந்தும் கேரளாவில் கோவிட் பாதிப்பு குறைந்தபாடில்லை. இந்நிலையில், கேரள சுகாதாத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் கூறியதாவது, 

கேரளத்தில் தற்போது கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டு 1,67,008 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று முன்தினம் புதிதாக 15,692 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 92 பேர் பலியாகினர். மொத்தமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 23,683 ஆக அதிகரித்துள்ளது.

கேரளாவில் கோவிட் பரவலைக் கட்டுப்படுத்த மாநில அரசு அனைத்து வகையான நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. அந்த வகையில், கேரளாவில் தடுப்பூசி செலுத்திக்கொள்ள தகுதியானவர்களில் 90 சதவீதம் பேருக்கு முதல் தவணை தடுப்பூசி; ஒரு கோடிக்கும் அதிகமானோருக்கு இரண்டு தவணை தடுப்பூசிகளும் செலுத்தப்பட்டு விட்டன. 100 சதவீத தடுப்பூசி இலக்கை கேரள அரசு விரைவில் எட்டும் என்று அவர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ

இன்றைய தலைப்புச் செய்திகள் | Today's News Headlines 26.10.2021 காற்று மணியின் ஓசைகளை கேட்டு குஷியான நாய்...! முதலையை தோளில் போட்டு குத்தாட்டம் | சிலிர்க்க வைக்கும் வீடியோ வைரல்...!
பார்வையாளர்ளை வியப்பில் ஆழ்த்திய பாம்பு நடனம்...! ஆமையின் கண்ணீரை பருகும் வண்ணத்துப்பூச்சிகள்...! ஒரே நாளில் தலையில் உள்ள பேனை விரட்ட எளிய டிப்ஸ்| How To Get Rid Of Head Lice Completely,
நெற்றியில் ஒற்றை கண்ணுடன் பிறந்த ஆட்டுக்குட்டி...! ஹோம் வொர்க் பண்ணினா பூனைக்கு பிடிக்காது சிறுவனை டிஸ்டர்ப் செய்யும் வீடியோ வைரல்....! கீழே கிடக்கும் குப்பையை எடுத்து குப்பை தொட்டியில் போடும் யானை...
Vaara Rasi Palan - 25.10.2021 to 31.10.2021 | Weekly rasi palan Tamil | வார ராசிபலன் மாட்டுப் பண்ணையை லாபகரமாக நடத்த என்ன செய்ய வேண்டும் |Cow Farming Business Ideas in Tamil | பிக் பாஸ் வீட்டில் கும்மாங்குத்து தொடங்கியது... அபிநய்யை பிறாண்டிய பாவனி...
View all comments

வாசகர் கருத்து