பெங்களூருக்கு எதிராக அபார ஆட்டம்: வருண் சக்ரவர்த்திக்கு விராட் கோலி புகழாரம்

Varun-Chakkaravarthy-2021-09-21

பெங்களூரு அணிக்கு எதிராகச் சிறப்பாகப் பந்துவீசி ஆட்ட நாயகன் விருதை வென்ற வருண் சக்ரவர்த்தியை கேப்டன் விராட் கோலி பாராட்டியுள்ளார்.

9 விக்கெட்...

கொல்கத்தாவுக்கு எதிரான ஆட்டத்தில் ஆர்சிபி அணி வீரர்கள் மோசமாக விளையாடித் தோற்றார்கள். கொல்கத்தா நைட் ரைடா்ஸ் 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ராயல் சேலஞ்சா்ஸ் பெங்களூரை வீழ்த்தியது.

3 விக்கெட்கள்...

அபுதாபியில் திங்கள்கிழமை இரவு நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூா் 19 ஓவா்களில் 92 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அடுத்து ஆடிய கொல்கத்தா 10 ஓவா்களில் 1 விக்கெட் இழப்புக்கு 94 ரன்கள் அடித்து வென்றது. வருண் சக்ரவா்த்தியும் ரஸ்ஸலும் தலா 3 விக்கெட்டுகள் எடுத்து ஆர்சிபி அணியை நிலைகுலைய வைத்தார்கள். 

ஆட்ட நாயகன்...

சிறப்பாகப் பந்துவீசிய வருண் சக்ரவர்த்திக்கு ஆட்ட நாயகன் விருது கிடைத்தது. நான்கு ஓவர்கள் வீசிய வருண் சக்ரவர்த்தி 13 ரன்கள் கொடுத்து மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதில் 15 பந்துகளில் அவர் ரன் எதுவும் கொடுக்கவில்லை. 

முன்னேற்றம்...

இந்த வெற்றியினால் புள்ளிகள் பட்டியலில் 7-ம் இடத்தில் இருந்த கொல்கத்தா, 5-ம் இடத்துக்கு முன்னேறியுள்ளது. ஆர்சிபி அணி தொடர்ந்து 3-வது இடத்தில் உள்ளது. இந்நிலையில் வருண் சக்ரவர்த்தியின் பந்துவீச்சு பற்றி ஆர்சிபி கேப்டன் விராட் கோலி கூறியதாவது:

இந்தியாவுக்காக...

வருண் சக்ரவர்த்தி நன்றாகப் பந்துவீசினார். இந்தியாவுக்காக விளையாடும்போது முக்கியமான வீரராக இருப்பார். சர்வதேச அளவில் வாய்ப்பு கிடைப்பது அபாரமானது. இந்தியாவுக்காக விளையாடப்போகிற வீரர் அவர். இது நல்ல விஷயம் என்றார்.

கொண்டாட்டம்...

வருண் சக்ரவர்த்தி எப்போது விக்கெட் எடுத்தாலும் அதைப் பெரிதளவில் கொண்டாட்ட மாட்டார். நிதானமாக தனது அணி வீரர்களுடன் அத்தருணத்தின் மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொள்வார். அவ்வளவுதான். சக வீரர் ரஸ்ஸலுடனான உரையாடலில் இதற்கான காரணத்தை வருண் சக்ரவர்த்தி கூறியதாவது:

மறந்து விடுவேன்...

விக்கெட் கிடைத்தவுடன் அதைக் கொண்டாடுவதால் என்னுடைய செயல்முறையிலிருந்து நான் விலகிவிடக்கூடாது. அதிகமாகக் கொண்டாடினால் அடுத்த பந்தில் என்ன செய்யவேண்டும் என்பதை மறந்து விடுவேன். எனவே தான் அதிகமாகக் கொண்டாட மாட்டேன். எனினும் பிறகு கொண்டாடி விடுவேன். 

பொருந்தாது.... 

 

சென்னை போன்ற சுழற்பந்து வீச்சுக்குச் சாதகமான ஆடுகளம் எனக்குப் பொருந்தாது. பேட்டிங்குக்குச் சாதகமான தட்டையான ஆடுகளமே எனக்குச் சரியாக இருக்கும். அபுதாபி மைதானத்தை மிகவும் விரும்ப ஆரம்பித்துவிட்டேன். தட்டையான ஆடுகளம் எனக்குப் பொருத்தமாக உள்ளது என்றார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ

இன்றைய தலைப்புச் செய்திகள் | Today's News Headlines 27.10.2021 இந்த காளை வந்தாலே களம் பதறும், ஜல்லிக்கட்டு காளை கருப்பு | |Kaalai Valarpu Interview | இன்றைய தலைப்புச் செய்திகள் | Today's News Headlines 26.10.2021
காற்று மணியின் ஓசைகளை கேட்டு குஷியான நாய்...! முதலையை தோளில் போட்டு குத்தாட்டம் | சிலிர்க்க வைக்கும் வீடியோ வைரல்...! பார்வையாளர்ளை வியப்பில் ஆழ்த்திய பாம்பு நடனம்...!
ஆமையின் கண்ணீரை பருகும் வண்ணத்துப்பூச்சிகள்...! ஒரே நாளில் தலையில் உள்ள பேனை விரட்ட எளிய டிப்ஸ்| How To Get Rid Of Head Lice Completely, நெற்றியில் ஒற்றை கண்ணுடன் பிறந்த ஆட்டுக்குட்டி...!
ஹோம் வொர்க் பண்ணினா பூனைக்கு பிடிக்காது சிறுவனை டிஸ்டர்ப் செய்யும் வீடியோ வைரல்....! கீழே கிடக்கும் குப்பையை எடுத்து குப்பை தொட்டியில் போடும் யானை... Vaara Rasi Palan - 25.10.2021 to 31.10.2021 | Weekly rasi palan Tamil | வார ராசிபலன்
View all comments

வாசகர் கருத்து