முக்கிய செய்திகள்

கொரோனாவுக்கு எதிராக விளக்கு ஏற்றியது, ஒலி எழுப்பியது ஏன்? - பிரதமர் நரேந்திர மோடி விளக்கம்

Modi 2021 07 20

Source: provided

புதுடெல்லி : இந்தியாவில் 100 கோடிக்கும் அதிகமான தடுப்பூசிகள் செலுத்தப்பட்ட நிலையில்  டெல்லியில் பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் உரையாற்றியதாவது:-

இந்தியாவில் 100 கோடி தடுப்பூசிகளை செலுத்தி சாதனை படைத்துள்ளோம். இந்த சாதனைக்கு பின் 130 கோடி மக்களின் சக்தி அடங்கியுள்ளது. நாட்டு மக்கள் அனைவருக்கும் இதயம் கனிந்த வாழ்த்துக்கள்.  கொரோனா எனும் பெரும் துயரத்தை சந்தித்த நாம் எந்த துயரையும் சந்திக்கும் வலிமை பெற்றுள்ளோம். 

விளக்கு ஏற்றுவது, கை தட்டி ஒலி எழுப்புவது எப்படி பயனளிக்கும் என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அந்த முயற்சிகள் எல்லாம் மருத்துவத்துறைக்கு உற்சாகத்தை அளித்தது.  இந்தியாவில் 100 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தி சாதனை படைக்கப்பட்டுள்ளது. கொரோனா குறித்த அனைத்து கேள்விகளுக்கும் இந்த சாதனை பதிலளித்துள்ளது.

வரும் தீபாவளி நமக்கு சிறப்பானதாக அமையும். காலணி அணிந்து கொண்டு வெளியே செல்வதைப் போல, முகக்கவசம் அணிவதையும் பழகிக்கொள்ள வேண்டும். பண்டிகை காலங்களில் அஜாக்கிரதையாக இருக்க கூடாது. மாஸ்க் போடுவதை தொடர வேண்டும்.  இந்திய மக்களின் உழைப்பில் உருவான பொருட்களுக்கு நாம் முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.  இந்தியாவில் தயாரிப்போம் திட்டத்தின் கீழ் எளிய மனிதர்களின் தயாரிப்புகளை வாங்குவதிலும் ஆர்வத்தை வளர்த்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து