முக்கிய செய்திகள்

100 கோடி தடுப்பூசி செலுத்தி சாதனை: பிரதமர் நரேந்திரமோடிக்கு பில்கேட்ஸ் பாராட்டு

bill-Gates 2021 10 22

Source: provided

புதுடெல்லி : இந்தியாவில் கொரோனாவுக்கு எதிராக தடுப்பூசி போடும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. தடுப்பூசி போடும் பணியில் புதிய மைல் கல் சாதனையாக இந்தியாவில் 100 கோடி டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. 100 கோடி டோஸ் தடுப்பூசி செலுத்திய இந்தியாவுக்கு பல்வேறு தரப்பிலும் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

முயற்சிக்கு சான்று...

அந்த வகையில், உலக பெரும் பணக்காரர்களில் ஒருவரான பில்கேட்ஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியதாவது:'இந்தியா 1 பில்லியன் தடுப்பூசிகளை செலுத்துள்ளது.  இந்தியாவின் கண்டுபிடிப்பு, உற்பத்தி செய்யும் திறன் மற்றும் கோவின் செயலின் உதவியுடன் லட்சக்கணக்கன சுகாதார ஊழியர்களின் முயற்சிகளுக்கான சான்றாக இது உள்ளது.  இதற்காக,பிரதமர் மோடி,உள்ளிட்டோருக்கு வாழ்த்துக்கள்',என்று பதிவிட்டுள்ளார்.

பிரதமர் மோடி...

இந்நிலையில்,இதற்கு பதில் அளிக்கும் வகையில் பில்கேட்ஸ்க்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்துள்ளார்.'1 பில்லியன் தடுப்பூசி மைல்கல்லை எட்டுவதில் இந்திய விஞ்ஞானிகள், சுகாதார பணியாளர்கள் மற்றும் கண்டுபிடிப்பாளர்களின் முயற்சிகளுக்கு உங்கள் பாராட்டுக்காக நன்றி பில்கேட்ஸ்.இந்த தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதற்கான உலகளாவிய முயற்சிகளில்  இந்தியா உறுதியான பங்குதாரராக நீடிக்கிறது” என்று பதிவிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து