எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
திருவனந்தபுரம் : முல்லைப்பெரியாறு அணை தொடர்பாக தவறான தகவல்களை பரப்புவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் எச்சரித்துள்ளார்.
கேரளாவில் சமீபத்தில் பெய்த பலத்த மழையால் பெரும் சேதம் விளைந்த நிலையில், முல்லைப்பெரியாறு அணைக்கு மிகுந்த பாதிப்பு ஏற்பட்டிருப்பதாகவும், அது ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் தகவல்கள் பரபரப்பட்டு வருகின்றன. இந்த அணை உடைந்தால் லட்சக்கணக்கான மக்கள் உயிரிழக்க நேரிடும் என சினிமா பிரபலங்கள் உள்பட பலரும் சமூக வலைத்தளங்களில் பரப்பி வருகின்றனர். இதனால் அணைக்கு அருகே வாழும் மக்கள் பெருத்த பீதியில் இருப்பதாக மாநில சட்டசபையில் எதிர்க்கட்சி தலைவர் தெரிவித்தார்.
இதற்கு முதல்வர் பினராயி விஜயன் பதில் அளிக்கையில், ‘முல்லைப்பெரியாறு அணை ஆபத்தான நிலையில் இருப்பதாகவும், லட்சக்கணக்கான மக்கள் சாகப்போகிறார்கள் எனவும் சிலர் சமூக வலைத்தளங்களில் தவறான தகவல்களை பரப்பி வருகின்றனர். தற்போதைய நிலையில் அப்படி ஒரு ஆபத்தான சூழல் இல்லை. எனவே இத்தகைய தவறான தகவல்களை பரப்புவோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்’ என எச்சரித்தார்.
முல்லைப்பெரியாறு விவகாரத்தில் அனைத்து பிரச்சினைகளிலும் தமிழக அரசு கேரளாவுடன் சிறப்பாக ஒத்துழைப்பு வழங்கி வருவதாக கூறிய பினராயி விஜயன், சில அம்சங்களில் மட்டும் இரு மாநிலங்களுக்கு இடையே லேசான கருத்து வேறுபாடுகள் இருப்பதாகவும், அவை பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்பட வேண்டும் எனவும் தெரிவித்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 1 year 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 1 month ago |