முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நாளை வெளியாகும் ஜெய் பீம்

ஞாயிற்றுக்கிழமை, 31 அக்டோபர் 2021      சினிமா
Image Unavailable

Source: provided

ஜெய் பீம் திரைப்படம் தீபாவளி வெளியீடாக நாளை நவம்பர் 2 அன்று அமேசான் ப்ரைம் வீடியோவில் வெளியாகவிருக்கிறது. ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் இத்திரைப்படம் வெளியாகிறது.

இப்படத்தில் முதன்முறையாக வழக்கறிஞராக நடிக்கிறார் சூர்யா. இது குறித்து பேசிய அவர், "நான் இந்தப் படத்தில் நடிக்க ஆரம்பிப்பதற்கு வெகு நாட்களுக்கு முன்னதாகவே, நீதிபதி சந்துரு ஐயாவை சந்தித்து பேசி இருக்கிறேன். அவர் வழக்கறிஞராக இருந்த காலத்தில் மனித உரிமைகள் தொடர்பான வழக்குகளுக்கு வக்கில் ஃபீஸ் பெற்றதில்லையாம்.

அப்படிப்பட்ட அவருடைய கதை இந்த உலகின் ஒவ்வொரு பகுதிக்கும் சென்று சேர வேண்டும் என்று நினைத்ததாலேயே வழக்கறிஞர் கதாபாத்திரத்தை ஏற்று நடித்தேன் என்றார். தமிழகத்தில் 1990-களில் நடந்த சம்பவங்களைக் கொண்டு இயக்குனர் த.செ.ஞானவேல் இக்கதையை உருவாக்கியுள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து