முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விஜய் ஹசாரே கோப்பை: தமிழக அணியில் மீண்டும் இடம் பெற்ற வாஷிங்டன் சுந்தர், தினேஷ் கார்த்திக்

புதன்கிழமை, 24 நவம்பர் 2021      விளையாட்டு
Image Unavailable

விஜய் ஹசாரே கோப்பைக்கான 20 வீரர்கள் கொண்ட தமிழக அணியில் இடதுகை வேகப்பந்துவீச்சாளர் நடராஜன் நீக்கப்பட்டுள்ளார். காயத்திலிருந்து மீண்ட தினேஷ் கார்த்திக், வாஷிங்டன் சுந்தர் மீண்டும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

விஜய் சங்கர் கேப்டன்...

சையது முஷ்தாக் அலி கோப்பையின் போது அணியை வழிநடத்திய கேப்டன் விஜய் சங்கர், விஜய் ஹசாரே கோப்பையிலும் தமிழக அணிக்குக் கேப்டனாக நீட்டிக்கப்பட்டுள்ளார். கை விரலில் ஏற்பட்ட காயம் காரணமாக இங்கிலாந்து டெஸ்ட் தொடர், ஐ.பி.எல் தொடர் இரண்டிலும் வாஷிங்டன் சுந்தர் விளையாடவில்லை, சையது முஷ்தாக் அலி தொடரிலும் விளையாடவில்லை. அதேபோல காயத்தால் தினேஷ் கார்த்திக்கும் சையது முஷ்தாக் அலி கோப்பையில் விளையாடவில்லை. இருவரும் காயத்திலிருந்து குணமடைந்ததால், விஜய் ஹசாரே கோப்பையில் தமிழக அணிக்குத் திரும்பியது மிகப்பெரிய பலமாகும்.

நடராஜன் நீக்கம்...

அதேசமயம், காயத்தில் நீண்ட நாட்கள் விளையாடாமல் இருந்து தமிழக அணியில் சையது முஷ்டாக் அலி கோப்பையில் விளையாடிய இடதுகை வேகப்பந்துவீச்சாளர் நடராஜன், விஜய் ஹசாரே கோப்பைக்கான தமிழக அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். தமிழக வீரர் பாபா அபராஜித் தற்போது தென் ஆப்பிரிக்க சென்றுள்ள இந்திய ஏ அணியில் இடம் பெற்றுள்ளார். அவர் தமிழக அணிக்கு வருகை இன்னும் உறுதியாகவில்லை ஆதலால்,அவரின் சகோதரர் பாபா இந்திரஜித் சேர்க்கப்பட்டுள்ளார்.

சவாலாகவே...

விஜய் ஹசாரே கோப்பையில் எலைட் பி பிரிவில் இடம்பெற்றுள்ள தமிழக அணியுடன் மும்பை, புதுச்சேரி, பரோடா, பெங்கால், கர்நாடக அணிகள் இடம் பெற்றுள்ளன. இதில் பரோடா, புதுச்சேரி அணிகளை தமிழகஅணி எளிதாக வென்றுவிடும், பெங்கால், மும்பை, கர்நாடக அணிகளுக்கு எதிரான ஆட்டம் தமிழக அணிக்கு சவாலாகவே இருக்கும்.

தமிழக அணி விவரம்:

விஜய் சங்கர்(கேப்டன்), என் ஜெகதீசன், தினேஷ் கார்த்திக், ஹரி நிசாந்த், ஷாருக் கான், ஷாய் கிஷோர், முருகன் அஸ்வின், சந்தீப் வாரியர், வாஷிங்டன் சுந்தர், எம் சித்தார்த், சாய் சுதர்ஸன், கங்கா ஸ்ரீதர் ராஜூ, எம். முகமதது, ஜே.கவுசிக், பி.சரவணகுமார், எல். சூர்யபிரகாஷ், பாபா இந்திரஜித், ஆர் சஞ்சய் யாதவ், எம் கவுசிக் காந்தி, ஆர் சிலம்பரசன்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து