முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மேகாலயா அரசியலில் திடீர் பரபரப்பு: 12 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் மம்தா கட்சியில் இணைந்தனர்

வியாழக்கிழமை, 25 நவம்பர் 2021      அரசியல்
Image Unavailable

மேகாலயாவில் மொத்தமுள்ள 17 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களில் 12 பேர் திரிணாமுல் காங்கிரசில் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வடகிழக்கு மாநிலமான மேகாலயாவில் தேசிய மக்கள் கட்சி தலைமையிலான கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. அம்மாநிலத்தின் முதல் மந்திரியாக கான்ரட் கொங்கல் சங்மா செயல்பட்டு வருகிறார். இதற்கிடையில், மேகாலயாவில் பிரதான எதிர்க்கட்சியாக காங்கிரஸ் செயல்பட்டு வருகிறது. காங்கிரஸ் கட்சியில் மொத்தம் 17 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். இதில், முன்னாள் முதல்வரான முகுல் சங்மாவும் அடக்கம்.

இந்நிலையில், மேகாலயாவில் மொத்தமுள்ள 17 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களில் 12 பேர் திடீரென மம்தாவின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு தாவியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முதல்-மந்திரியான முகுல் சங்மா உள்பட 12 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்  காங்கிரசில் இருந்து விலகி திரிணாமுல் காங்கிரசில் இணைந்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. 

 

மேற்குவங்காளத்தில் ஆட்சி செய்து வரும் திரிணாமுல் காங்கிரசின் அரசியல் வட்டத்தை விரிவு படுத்தும் நோக்கத்தோடு அக்கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜி பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். இதனால், பல்வேறு மாநிலங்களில் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளில் இருந்து முக்கிய தலைவர்கள் திரிணாமுல் காங்கிரசில் இணைந்த வண்ணம் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இரவோடு இரவாக 17 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களில் 12 பேர் திரிணாமுல் காங்கிரசில் இணைந்ததாக வெளியாகியுள்ள தகவல் மேகாலய அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து