முக்கிய செய்திகள்

செக் குடியரசில் புதிய உச்சத்தை தொடும் கொரோனா பாதிப்பு

சனிக்கிழமை, 27 நவம்பர் 2021      உலகம்
Czech-Corona 2021 11 27

செக் குடியரசில் கொரோனா உறுதி செய்யப்படுவோரின் தினசரி எண்ணிக்கை புதிய உச்சத்தைத் தொட்டது. 

இதுகுறித்து அந்த நாட்டு அதிகாரிகள் கூறியதாவது:-

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 27,717 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இது, நாட்டில் இதுவரை இல்லாத அதிகபட்ச தினசரி பாதிப்பு எண்ணிக்கையாகும். இது, கடந்த செவ்வாய்க்கிழமை பதிவான முந்தைய அதிகபட்ச எண்ணிக்கையைவிட ஏறத்தாழ 2,000 அதிகமாகும் என்று அதிகாரிகள் தெரிவித்தனா். செக் குடியரசில் வெள்ளிக்கிழமை நிலவரப்படி 20,62,140 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அவா்களில் 32,595 போ் அந்த நோய்க்கு பலியாகியுள்ளனா்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து