முக்கிய செய்திகள்

‘ஒமைக்ரான்’ அச்சுறுத்தலுக்கு இடையில் தமிழகத்தில் இன்று 13-வது மெகா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது

வெள்ளிக்கிழமை, 3 டிசம்பர் 2021      தமிழகம்
Vaccination-camp 2021 11 24

‘ஒமைக்ரான்’ அச்சுறுத்தலுக்கு இடையில் தமிழகத்தில் இன்று 13-வது மெகா தடுப்பூசி முகாம் 60 ஆயிரம் மையங்களில் நடைபெறுகிறது.

கொரோனா வைரஸ் உருமாற்றம் அடைந்து ஒமைக்ரான் வைரஸ் என்ற வடிவில் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இந்த வைரஸ் பரவாமல் தடுக்க மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. கொரோனா தடுப்பூசி ஓரளவு கட்டுப்படுத்தும் என்ற நம்பிக்கை உள்ளது. எனவே அனைவரும் விரைவாக தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என்று அரசு அறிவுறுத்தி உள்ளது.

இன்று (சனிக்கிழமை) மெகா தடுப்பூசி முகாம் தமிழகம் முழுவதும் நடக்கிறது. மொத்தம் 60 ஆயிரம் இடங்களில் நடக்கிறது. 2 தவணை தடுப்பூசி செலுத்தினால் மட்டுமே கோவிட் தொற்று பாதிப்பில் இருந்து முழுமையாக நம்மை பாதுகாத்துக்கொள்ளும் வகையில் முழு எதிர்ப்பு சக்தி கிடைக்கும். சென்னையில் 2-ம் தவணை தடுப்பூசி செலுத்த வேண்டிய நாட்களை கடந்து 10 லட்சத்து 39 ஆயிரத்து 704 பேர் 2-ம் தவணை கோவிட் தடுப்பூசி செலுத்த வேண்டியுள்ளனர். பெருநகர சென்னை மாநகராட்சியில் தற்போது 11 லட்சத்து 83 ஆயிரத்து 905 கொரோனா தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன.

தற்போது உலக நாடுகளில் கொரோனா வைரஸ் தொற்றின் உருமாறிய ஒமைக்ரான் வைரஸ் தொற்று பரவி வருகிறது. இந்தியாவில் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் 2 பேருக்கு ஒமைக்ரான் வகை தொற்று கண்டறியப்பட்டுள்ளது. எனவே, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து கொரோனா தொற்றில் இருந்து பாதுகாத்து கொள்ள அனைவரும் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வது இன்றியமையாதது ஆகும்.

இன்று (சனிக்கிழமை) பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 200 வார்டுகளிலும் 1,600 முகாம்களுடன் மெகா கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்கள் காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணிவரை நடத்தப்பட உள்ளன. எனவே, கோவிட் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத நபர்களும், 2-ம் தவணை தடுப்பூசி செலுத்த வேண்டிய நாட்களை கடந்துள்ள நபர்களும் அலட்சியமாக இல்லாமல் இந்தத் தடுப்பூசி முகாமினை பயன்படுத்திக் கொண்டு கோவிட் தடுப்பூசியினை தவறாமல் செலுத்திக்கொள்ள வேண்டும்.

தடுப்பூசி சிறப்பு முகாம்கள் அமைந்துள்ள இடங்களை பொதுமக்கள் http://chennaicorporation.gov.in/gcc/covid-details/mega-vac-det.jsp. என்ற மாநகராட்சியின் இணையதள இணைப்பின் வாயிலாக தெரிந்து கொள்ளலாம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து