முக்கிய செய்திகள்

எல்லை பாதுகாப்பு படையினருக்கு உலகத்தரம் வாய்ந்த தொழில்நுட்ப வசதிகள் விரைவில் வழங்கப்படும்: அமித்ஷா பேச்சு

ஞாயிற்றுக்கிழமை, 5 டிசம்பர் 2021      இந்தியா
Amitsha 2021 12 05

Source: provided

புதுடெல்லி : எல்லை பாதுகாப்பு படையினருக்கு நவீன தொழில்நுட்ப வசதிகள் கிடைப்பதை அரசு உறுதி செய்யும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்தார்.

எல்லை பாதுகாப்பு படையின் 57-வது எழுச்சி தின கொண்டாட்டத்தை முன்னிட்டு நடந்த விழாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியதாவது:

ஒரு நாடு பாதுகாப்பாக இருக்கும்போது தான், வளர்ச்சி பெறுவதுடன் முன்னேற்ற பாதையில் செல்லும். நாட்டின் பாதுகாப்பை நீங்கள் உறுதி செய்கிறீர்கள். எல்லைகளை பாதுகாத்து, நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்யும் உங்களின் பணியை எப்போதும் நினைவில் வைத்திருப்போம். எல்லை பாதுகாப்பு படையினருக்கு நவீன தொழில் நுட்ப வசதிகள் கிடைக்க செய்வதை மத்திய அரசு உறுதி செய்யும். இதற்கு அரசு உறுதிபூண்டுள்ளது. 

டுரோன்கள் மூலம் தொடர்ச்சியாக அச்சுறுத்தல்கள் வந்து கொண்டுள்ளன. டுரோன்களுக்கு எதிரான தொழில்நுட்பத்தை பி.எஸ்.எப், டி.ஆர்.டி.ஓ. மற்றும் என்.எஸ்.ஜி. இணைந்து தயாரித்து வருகின்றனர். உள்நாட்டு தொழில்நுட்ப வசதியுடன் விரைவில் அதனை நமது விஞ்ஞானிகள் உருவாக்கி தருவார்கள் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.

மோடி, பிரதமராக பதவியேற்றதும், நமது எல்லைக்குள் ஊடுருபவர்கள், பாதுகாப்பு படையினர் மீது தாக்குதல் நடத்துபவர்களுக்கும் உடனடியாக பதிலடி கொடுக்கப்படுகிறது. நமது எல்லைகளையும், வீரர்களையும் யாரும் சாதாரணமாக எடுத்து கொள்ள அனுமதிக்க முடியாது என்பதை இந்தியா உறுதி செய்துள்ளது. உரி மற்றும் புல்வாமாவில் நடந்த பயங்கரவாத தாக்குதல்களுக்கு சர்ஜிக்கல் மற்றும் விமானப்படை தாக்குதல் மூலம் பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கைக்கு அனைத்து உலக நாடுகளும் இந்தியாவிற்கு பாராட்டு தெரிவித்துள்ளன.

பி.எஸ்.எப்.-ல் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்காக 50 ஆயிரம் வீரர்களை தேர்வு செய்யும் பணி துவங்கி உள்ளது. எல்லை பகுதியில் சாலைகள் அமைப்பதற்காக பட்ஜெட்டில் ஒதுக்கப்படும் நிதியானது 40 ஆயிரம் கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இது, எல்லை பகுதிகளின் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதில் மத்திய அரசு கொண்டுள்ள உறுதித்தன்மையை எடுத்து காட்டுகிறது. இவ்வாறு அமித்ஷா பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து