எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சபரிமலை சென்று பரபரப்பை ஏற்படுத்திய பிந்து அம்மிணி, தன்மீது அடிக்கடி தாக்குதல்கள் நடத்தப்படுவதால் கேரளாவை விட்டு வெளியேற போவதாக தெரிவித்துள்ளார்.
சபரிமலை ஐயப்பன் கோயிலில் இளம்பெண்கள் தரிசனம் செய்வதற்கு விதிக்கப்பட்ட தடையை கடந்த 2018ம் ஆண்டு உச்சநீதிமன்றம் நீக்கியது. இதையடுத்து கோழிக்கோட்டை சேர்ந்த பிந்து அம்மிணி, கனக துர்க்கா ஆகிய 2 இளம் பெண்கள் போலீஸ் பாதுகாப்புடன் சென்று சபரிமலையில் தரிசனம் செய்தனர்.
இதையடுத்து 2 பேருக்கும் கொலை மிரட்டல் வந்தன. இதையடுத்து 2 பேரும் பல மாதமாக தலைமறைவாக இருந்தனர். இந்த நிலையில் பிந்து அம்மிணிக்கு எதிராக சமீபத்தில் 2 முறை தாக்குதல் நடந்தது. கடந்த 2 நாட்களுக்கு முன் கோழிக்கோட்டில் வைத்து மீண்டும் அவர் தாக்கப்பட்டார். இதுதொடர்பாக பிந்து அம்மிணி போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் தாக்குதல் நடத்திய கோழிக்கோடு பேப்பூரை சேர்ந்த மோகன்தாஸ் மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். மோகன்தாசும் பிந்து அம்மிணி மீது புகார் அளித்தார்.
இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த நிலையில் பிந்து அம்மிணி நிருபர்களிடம் கூறியதாவது: கேரளாவில் என் உயிருக்கு எந்த உத்தரவாதமும் இல்லாத நிலை உள்ளது. என் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. நான் பெண் என்பதாலும், ஒரு தலித் என்பதாலும் தான் தாக்குதல் நடத்தப்படுகிறது. சங் பரிவார் அமைப்புகள் தான் இதற்கு காரணம் ஆகும். எனக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனால் கேரள போலீஸ் எனக்கு எந்த பாதுகாப்பும் தர வில்லை.
சபரிமலை சென்று வந்த பிறகு தாக்குதல் நடத்துவதால், எனக்கு பக்தர்களின் ஆதரவு தேவைப்படுகிறது. என் மீது தாக்குதல் அதிகரித்து வருவதால் கேரளாவில் தொடர்ந்து வாழ முடியாத நிலை உள்ளது. எனவே கேரளாவை விட்டு வெளியேற நான் தீர்மானித்துள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 4 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 4 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 5 months ago |
-
தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு மத்திய அரசு முட்டுக்கட்டை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு
15 Feb 2026தஞ்சை, தமிழகத்தின் வளர்ச்சிக்கு மத்திய பா.ஜ.க. அரசு முட்டுக்கட்டை போட நினைக்கிறது. நமக்கான நிதியை தர மறுக்கிறது.
-
40 ஆண்டுக்கும் மேலாக தமிழ்நாட்டில் வசிக்கும் இலங்கை தமிழர்களுக்கு குடியுரிமை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
15 Feb 2026சென்னை, 40 ஆண்டுக்கும் மேலாக தமிழ்நாட்டில் வசிக்கும் இலங்கை தமிழர்களுக்கு குடியுரிமை வழங்க வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார
-
தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணி தொடருமா என்பது சந்தேகம்: ஈரோட்டில் எடப்பாடி பழனிசாமி பேச்சு
15 Feb 2026ஈரோட்டு, தினமும் தி.மு.க. காங்கிரஸ் வார்த்தைப்போர் நடக்கிறது என்றும் தி.மு.க.
-
தமிழ்நாட்டில் பிப். 23-ல் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு: தலைமைத் தேர்தல் அதிகாரி தகவல்
15 Feb 2026சென்னை, தமிழ்நாட்டில் இறுதி வாக்காளர் பட்டியல் வரும் 23ஆம் தேதி வெளியிடப்படும் என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார்.
-
அன்பு வழியை போதித்த வள்ளலார் வழியில் ஏழை எளிய மக்களுக்காகவே தி.மு.க. அரசு செயல்படுகிறது அனைத்துலக வள்ளலார் மாநாட்டை துவக்கி வைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
15 Feb 2026சென்னை, அன்பு வழியை போதித்த வள்ளலார் வழியில் ஏழை எளிய மக்களுக்காகவே தி.மு.க.
-
தங்கம் விலை சற்று சரிவு
16 Feb 2026சென்னை, தங்கம் விலை நேற்று சற்று குறைந்து விற்பனையானது.
-
பொறியியல் கல்லூரி மாணவர்கள் 1,657 பேருக்கு மடிக்கணினிகள் அமைச்சர் சுப்பிரமணியன் வழங்கினார்
16 Feb 2026சென்னை, பொறியியல் கல்லூரி மாணவர்கள் 1,657 பேருக்கு மடிக்கணினிகளை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வழங்கினார்.
-
கேரளாவில் உறுப்பு தானம் மூலம் 5 பேரை வாழவைத்த 10 மாத பெண் குழந்தைக்கு அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு
16 Feb 2026திருவனந்தபுரம், சாலை விபத்தில் உயிரிழந்த 10 மாதக் குழந்தை தனது உறுப்புகள் மூலம் 5 பேரை காப்பாற்றிய 10 மாதக் குழந்தை ஆலின் ஷெரின் ஆபிரகாமின் உடலுக்கு அரசு மரியாதையுடன் இ
-
விவசாயம், சுகாதாரம் உள்ளிட்ட துறைகளில் புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் ஆந்திரா அரசுக்கு பில்கேட்ஸ் பாராட்டு
16 Feb 2026அமராவதி, விவசாயம், சுகாதாரம் உள்ளிட்ட துறைகளில் புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் ஆந்திரா அரசுக்கு பில்கேட்ஸ் பாராட்டு தெரிவித்துள்ளார்.
-
சூடானில் துணை ராணுவம் தாக்குதல்: பொதுமக்களில் 6 ஆயிரம் பேர் பலியானதாக ஐ.நா. குற்றச்சாட்டு
16 Feb 2026கார்டும், துணை ராணுவப் படையினர் நடத்திய கோரத் தாக்குதலில் ஒரே வாரத் தில் மட்டும் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அப்பாவி பொதுமக்கள் கொன்று குவிக்கப்பட்டதாக ஐக்கிய நாடுகள் சபை
-
இருப்பது உண்மைதான்: வேற்றுக்கிரகவாசிகள் குறித்து பராக் ஒபாமா பரபரப்பு தகவல்
16 Feb 2026நியூயார்க், வேற்றுக்கிரக வாசிகள் இருப்பது உண்மைதான் என்று அமெரிக்க முன்னாள் அதிபா் பராக் ஒபாமா தெரிவித்துள்ளாா்.
-
விஜய் முன்னிலையில் த.வெ.க.வில் இணைந்த அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. மனோகர்
16 Feb 2026சென்னை, த.வெ.க. தலைவர் விஜய் முன்னிலையில் தென்காசி அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. மனோகர் இணைந்தார்.
-
நாடு முழுவதும் சி.பி.எஸ்.இ., 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று துவக்கம்
16 Feb 2026புதுடெல்லி, நாடு முழுவதும் சி.பி.எஸ்.இ., 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று தொடங்குகிறது.


