முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சூடானில் துணை ராணுவம் தாக்குதல்: பொதுமக்களில் 6 ஆயிரம் பேர் பலியானதாக ஐ.நா. குற்றச்சாட்டு

திங்கட்கிழமை, 16 பெப்ரவரி 2026      உலகம்
UNO-2023 04 06

கார்டும், துணை ராணுவப் படையினர் நடத்திய கோரத் தாக்குதலில் ஒரே வாரத் தில் மட்டும் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அப்பாவி பொதுமக்கள் கொன்று குவிக்கப்பட்டதாக ஐக்கிய நாடுகள் சபை அதிர்ச்சி தகவலை வெளியிட்டது. 

சூடானில் ராணுவத்திற்கும் துணை ராணுவத்திற்கும் இடையே கடந்த 2023-ம் ஆண்டில் பயங்கரமான உள்நாட்டுப் போர் வெடித்தது. நாட்டின் அதிகாரத்தை யார் கைப்பற்றுவது என்ற போட்டியே இந்த போருக்கு முக்கியக் காரணமாக அமைந்துள்ளது. ராணுவம் தரப்பில் ஜெனரல் அப்தெல் பத்தா அல்-புர்ஹான் தலைமையி லான 'சூடான் ஆயுதப் படை'கள் செயல்படுகின்றன. துணை ராணுவம் தரப்பில் முகமது ஹம்தான் டகாலோ தலைமையிலான ஆர்.எஸ்.எப். எனப்படும் விரைவு அதிரடிப் படை செயல்பட்டு வருகின்றன.

தொடக்கத்தில் இருவரும் இணைந்து ஆட்சியைப் பிடித்தாலும், பிறகு துணை ராணுவத்தை அதிகாரப்பூர்வ ராணுவத்துடன் இணைப்பது தொட பான பேச்சுவார்த்தையில் மோதல் ஏற்பட்டது. இந்நிலையில் டார்பூர் மாகாணத்தில் உள்ள எல்-பாஷர் நகரை கைப்பற்றுவதற்காக ஆர்.எஸ்.எப். படைகள் கடந்த அக்டோபர் மாதம் கொடூர தாக்குதலை நடத்தின.

அப்போது அக்டோபர் 25 முதல் 27 வரையிலான வெறும் 3 நாட்களில் மட்டும் 4 ஆயிரத்து 400 அப்பாவி பொதுமக்கள் நகருக்குள்ளேயே வைத்து சுட்டுக் கொல்லப்பட்டனர். தப்பி ஓட முயன்ற குழந்தைகள் உள் பட 1,600 பேரை எல்லையில் வைத்து எந்திர துப்பாக்கியால் சுட்டு கொன்று குவித்தனர்.

துணை ராணுவப் படையினர் நடத்திய கோரத் தாக்குதலில் ஒரே வாரத் தில் மட்டும் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அப்பாவி பொதுமக்கள் கொன்று குவிக்கப்பட்டதாக ஐக்கிய நாடுகள் சபை அதிர்ச்சி தகவலை வெளியிட்டது. மேலும், ஆப்பிரிக்க பழங்குடியின பெண்களை குறிவைத்து ஆர்.எஸ்.எப். படையினர் திட்டமிட்ட முறையில் பாலியல் வன்கொடுமைகளில் ஈடுபட்டதாகவும் ஐ.நா. குற்றம் சாட்டியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago
View all comments

வாசகர் கருத்து