முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இருப்பது உண்மைதான்: வேற்றுக்கிரகவாசிகள் குறித்து பராக் ஒபாமா பரபரப்பு தகவல்

திங்கட்கிழமை, 16 பெப்ரவரி 2026      உலகம்
Obama-2023-05-20

நியூயார்க், வேற்றுக்கிரக வாசிகள் இருப்பது உண்மைதான் என்று அமெரிக்க முன்னாள் அதிபா் பராக் ஒபாமா தெரிவித்துள்ளாா்.

வேற்றுக்கிரகவாசிகள் உள்ளனரா, இல்லையா என உலகம் முழுவதும் பல ஆண்டுகளாக விவாதிக்கப்பட்டு வருகிறது. அமெரிக்க ஆய்வாளா்கள் வேற்றுக்கிரகவாசிகளைப் பிடித்து வந்து, அந்நாட்டின் நெவாடா பகுதியில் உள்ள ரகசியமான இடமான ‘ஏரியா 51’-இல் வைத்து ஆய்வு செய்து வருவதாகவும் அவ்வப்போது தகவல் வெளியாகி வருகிறது. இதை அமெரிக்கா இதுவரை உறுதி செய்யவில்லை.

இந்நிலையில், யூடியூபா் ஒருவருக்கு ஒபாமா அளித்த பேட்டியின்போது, வேற்றுக்கிரகவாசிகள் குறித்து கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த ஒபாமா, வேற்றுக்கிரகவாசிகள் இருப்பது உண்மைதான், ஆனால் நான் இதுவரை பாா்த்ததில்லை என்றாா். ஏரியா 51-இல் வேற்றுக்கிரகவாசிகளை வைத்து ஆய்வு நடத்தப்படுவதாக கூறப்படுவது குறித்த கேள்விக்கு, அது உண்மையில்லை என்றும், அங்கு பாதாள சுரங்க ஆய்வுக் கூடம் எதுவும் இல்லை என்றும் கூறினாா்.

அமெரிக்க முன்னாள் அதிபா் ஒருவரே, வேற்றுக்கிரகவாசிகள் இருப்பதாக கூறியிருப்பது, உலகம் முழுவதும் பல விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது. வேற்றுக்கிரகவாசிகள் குறித்த ஆா்வலா்களுக்கு இது புதிய ஆா்வத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago
View all comments

வாசகர் கருத்து