முக்கிய செய்திகள்

தர்புகா சிவா இயக்கும் முதல் நீ முடிவும் நீ

திங்கட்கிழமை, 10 ஜனவரி 2022      சினிமா
Darbuka-Siva 2022 01 08

Source: provided

முதல் நீ முடிவும் நீ படத்தை இசை அமைத்து எழுதி இயக்கியுள்ளார் இயக்குனர் தர்புகா சிவா. இப்படம் குறித்து பேசிய அவர், இளைய சமூகத்தின் உணர்வுகளை மையமாக கொண்ட மென்மையான டிராமாதான் இத்திரைப்படம். சென்னையில் 90’s களின் பிற்பகுதியில் வளர்ந்து வரும் உயர்நிலைப் பள்ளிக் மாணவர்களின் கண்ணோட்டத்தில் இந்தக்கதை விவரிக்கப்பட்டுள்ளது என்றார். இப்படம் 'நியூயார்க் திரைப்பட விழாவில் சிறப்பு மிகு கௌரவ விருதும், மாசிடோனியா ஆர்ட் ஃபிலிம் விருது விழாவில்  ‘சிறந்த இயக்குனர்' விருதினையும் வென்றுள்ளதாக தர்புகா சிவா கூறினார். மேலும், சித் ஸ்ரீராம் குரலில், பாடலாசிரியர்  தாமரை எழுதிய இப்படத்தின் டைட்டில் பாடல், பல்வேறு வானொலி நிலையங்களின் தரவரிசையில் தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகிறதாகவும் தெரிவித்தார். சூப்பர் டாக்கீஸ் சார்பில் சமீர் பாரத் ராம் தயாரித்துள்ள இப்படம் ஜனவரி 21, அன்று ZEE5 இல் வெளியாகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து