எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கேப்டன் பதவியிலிருந்து விலகுவதாக விராட் கோலி அறிவித்தது குறித்து அனுஷ்கா சர்மா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நெகிழ்ச்சியான பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக உங்கள் வளர்ச்சி மற்றும் உங்கள் தலைமையின் கீழ் இந்த அணி செய்த சாதனைகளை நினைத்து நான் மிகவும் பெருமை கொள்கிறேன். ஆனால் அதை விடவும் உங்களுக்குள் நீங்கள் அடைந்த வளர்ச்சியைப் நினைத்து நான் மிகவும் பெருமைப்படுகிறேன். 2014ஆம் ஆண்டில் நாம் மிகவும் சிறியவர்களாக இருந்தோம். நல்ல எண்ணங்கள் நேர்மறை உத்வேகம் மற்றும் நோக்கங்கள் மட்டுமே நம்மை வாழ்க்கையில் முன்னெடுத்துச் செல்லும் என்று நினைத்தோம். அவைகளும் நிச்சயமாக அவ்வாறு செய்யும். ஆனால் சவால்கள் இல்லாமல் இல்லை. நீங்கள் சந்தித்த பல சவால்கள் எப்போதும் ஃபீல்டில் மட்டுமே இருந்ததில்லை. ஆனால், இதுதான் அல்லவா?
உங்கள் நல்ல நோக்கத்திற்கு இடையூறு செய்யும் எதையும் நீங்கள் அனுமதிக்காமல் இருந்ததை எண்ணி நான் மிகவும் பெருமைப்படுகிறேன். சில தோல்விகளுக்குப் பிறகு நீங்கள் முன்னுதாரணமாக வழிநடத்தி, உங்கள் ஆற்றலின் ஒவ்வொரு துளியையும் கொடுத்து களத்தில் வென்று கொடுத்தீர்கள். உங்கள் கண்களில் கண்ணீருடன் நான் உங்கள் அருகில் அமர்ந்திருந்தேன். அப்போதும் நீங்கள் இன்னும் ஏதாவது செய்திருக்கலாமே என்று நினைத்தீர்கள். இதுதான் நீங்கள். இதைத்தான் நீங்கள் மற்றவர்களிடமிருந்தும் எதிர்பார்க்கிறீர்கள். இதுதான் உங்களை என் பார்வையிலும் உங்கள் நலம் விரும்பிகளின் பார்வையிலும் சிறந்தவராக்குகிறது. ஏனென்றால் இவை அனைத்துக்கும் அப்பால் உங்களின் தூய்மையான, கலப்படமற்ற நல்ல நோக்கங்கள் எப்போதும் இருந்தன. அனைவராலும் அதை புரிந்து கொள்ள முடியாது. இவ்வாறு அனுஷ்கா தனது பதிவில் கூறியுள்ளார்.
நீக்க முடியாத கேப்டனாக இருக்க கோலிக்கு விருப்பம்: மஞ்ச்ரேக்கர்
முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் இது தொடர்பாக கூறியதாவது., குறுகிய கால இடைவெளியில் அனைத்தும் ஒன்றன் பின் ஒன்றாக விராட்கோலியின் வாழ்க்கையில் நடந்து விட்டது. முதலில் ஐ.பி.எல். தொடரின் கேப்டன் பதவியில் இருந்து விலகினார். அதன் பிறகு 20 ஓவர் போட்டிக்கான இந்திய அணி கேப்டன் பதவியில் இருந்து விலகினார். அதன் பின்னர் ஒருநாள் கேப்டன் பதவியில் இருந்து கோலி நீக்கப்பட்டார். தற்போது டெஸ்ட் கேப்டன் பதவியில் இருந்து அவர் விலகியது யாரும் எதிர்பாராதது. முக்கியமான பொறுப்புகளில் இருந்த கோலி குறுகிய இடைவெளியில் வெளியேறி விட்டார்.
இந்திய கிரிக்கெட்டில் யாரும் நீக்க முடியாக கேப்டனாக வலம் வர வேண்டும் என்று கோலி விரும்பினார். அதனால் தான் அந்த முடிவை கிரிக்கெட் வாரியம் எடுக்கும் முன் தாமாகவே கேப்டன் பதவியை கோலி ராஜினாமா செய்துள்ளார். இவ்வாறு மஞ்ச்ரேக்கர் கூறி உள்ளார்.
இந்திய டெஸ்ட் அணிக்கு கேப்டன் ரிஷப்: யுவராஜ்
கோலி விலகலை அடுத்து இந்திய டெஸ்ட் அணியின் புதிய கேப்டனாக யார் நியமிக்கப்படவுள்ளனர் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. சிலர் ரோகித் சர்மாவை டெஸ்ட் கேப்டனாக நியமிக்க பரிந்துரை செய்து வருகின்றனர். ஆனால், முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர், ரிஷப் பண்ட் தான் புதிய கேப்டன் பதவிக்கு தகுதியானவர் என கூறியிருந்தார். இதற்கு யுவராஜ் சிங்கும் தனது ஆதரவை தெரிவித்துள்ளார். இதுகுறித்து யுவராஜ் சிங் கூறியதாவது.,
ரிஷப் பண்ட் தான் இந்திய டெஸ்ட் அணியை வழி நடத்த சிறந்த வீரர். ஸ்டம்பிற்கு பின் நின்றபடி அவரால் ஆட்டத்தை எளிதாக கணிக்க முடியும். மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் பதவியில் இருந்து ரிக்கி பாண்டிங் விலகியவுடன் ரோகித் சர்மாவுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. அதற்கு பின் அவரது பேட்டிங்கில் நல்ல முன்னேற்றம் தெரிந்தது. புதிதாக கிடைத்த கேப்டன் பொறுப்பு அவரை, 100 ரன்கள், 150 ரன்கள், 200 ரன்கள் கூட அடிக்க வைத்தது. அதேபோன்று ரிஷப் பண்டுக்கும் பொறுப்பு வழங்கப்பட்டால் அவரால் பல சதங்களை விளாச முடியும். இவ்வாறு யுவராஜ் சிங் தெரிவித்தார்.
அண்டர்-19 உலக கோப்பை: இங்கிலாந்து அணி வெற்றி
ஐ.சி.சி. 19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டித் தொடர் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்று வருகிறது. இதில் வங்கதேசம் அணி இங்கிலாந்தை எதிர்கொண்டது. டாஸ் வென்ற வங்கதேசம் முதலில் களம் இறங்கியது. இங்கிலாந்து அணியின் அபார பந்து வீச்சால் அந்த அணி வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். 35.2 ஓவர்கள் முடிவில் வங்கதேசம் 97 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இங்கிலாந்து தரப்பில் அதிகபட்சமாக ஜோசுவா பாய்டன் 4 விக்கெட்களை கைப்பற்றினார்.
இதை தொடர்ந்து இங்கிலாந்து அணிக்கு 96 ரன்கள் என்ற வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. பின்னர் களம் இறங்கிய அந்த அணி 25 புள்ளி 1 ஓவர் முடிவில் 3 விக்கெட்களை இழந்து இலக்கை எட்டியது. இதையடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் தமது முதல் போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்றுள்ளது.
ஆஸ்திரேலியாவை விட்டு வெளியேறிய ஜோகோவிச்
பிரபல டென்னிஸ் வீரர்நோவக் ஜோகோவிச், 2-வது முறையாக விசா ரத்து செய்யப்பட்ட விவகாரத்தில் சட்ட ரீதியான போராட்டத்தில் தோல்வியடைந்தார். கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஒபன் டென்னிஸ் நேற்று (17ம் தேதி) ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் தொடங்கியது. இந்தத் தொடரில் பங்கேற்பதற்காக உலகின் முதல் நிலை வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளாமலேயே கடந்த 6-ம் தேதி மெல்பர்ன் சென்றார்.
இந்நிலையில், ஆஸ்திரேலியாவின் குடிவரவு அமைச்சர் அலெக்ஸ் ஹாக், பொது நலன் கருதி, கடந்த வெள்ளிக்கிழமை ஜோகோவிச்சின் விசாவை ரத்து செய்து உத்தரவிட்டார். இதை எதிர்த்து ஜோகோவிச், ஃபெடரல் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கை விசாரித்த 3 பேர் அடங்கிய நீபதிகள் அமர்வு, ஒருமனதாக ஜோகோவிச்சின் மேல் முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தனர். இதையடுத்து ஆஸ்திரேலியாவில் இருந்து வெளியேறினார் ஜோகோவிச். மெல்பர்ன் விமான நிலையத்தில் இருந்து துபாய் புறப்பட்ட விமானத்தில் ஜோகோவிச் புறப்பட்டுச் சென்றார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 1 month ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 2 months ago |
-
பீகார் தேர்தல் முடிவுகள் தமிழகத்தில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது: டி.டி.வி.தினகரன்
15 Nov 2025சென்னை : 2026 சட்டமன்ற தேர்தலில் தி.மு.க - த.வெ.க இடையேதான் போட்டி என்று டி.டி.வி.தினகரன் கூறினார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 15-11-2025.
15 Nov 2025 -
திருநள்ளாறு கோவில் ஊழியர்கள் வேலை நிறுத்தம்: பக்தர்கள் அவதி
15 Nov 2025புதுச்சேரி : திருநள்ளாறு கோவில் ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதால் பக்தர்கள் அவதியடைந்தனர்.
-
பொங்கல் பண்டிகை: சில நிமிடங்களில் விற்று தீர்ந்த ரயில் டிக்கெட்டுகள்
15 Nov 2025சென்னை, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தென் மாவட்டங்களுக்குச் செல்லும் அனைத்து ரயில்களிலும் டிக்கெட்டுகள் சில நிமிடங்களில் விற்றுத் தீர்ந்தன.
-
எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக வழக்கு: ஐகோர்ட்டில் விரைவில் விசாரணை
15 Nov 2025சென்னை : எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான வழக்கில் ஐகோர்ட்டில் விரைவில் விசாரணை நடைபெறவுள்ளது.
-
இந்தியாவில் தொழில்மயமான மாநிலமாக தமிழ்நாடு உள்ளது: அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தகவல்
15 Nov 2025சென்னை, இந்தியாவில் தொழில்மயமான மாநிலமாக தமிழ்நாடு உள்ளது என்று அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்தார்.
-
தமிழகம் முழுவதும் ஆசிரியர் தகுதித்தேர்வு 2-ம் தாள் தேர்வு இன்று நடைபெறுகிறது
15 Nov 2025சென்னை : தமிழகம் முழுவதும் ஆசிரியர் தகுதித்தேர்வின் 2-ம் தாள் தேர்வு இன்று நடைபெறுகிறது.
-
பீகார் சட்டசபை தேர்தல்: ஆர்.ஜே.டி 23 சதவீத வாக்குகளை பெற்று முதலிடம்
15 Nov 2025பாட்னா : பீகாரில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் அரசியல் கட்சிகள் பெற்ற வாக்கு சதவீதம் வெளியாகியுள்ளது.
-
ஐ.நா. பொதுச்செயலாளருடன் ஜெய்சங்கர் சந்திப்பு
15 Nov 2025வாஷிங்டன், ஐ.நா. பொதுச்செயலாளரை சந்தித்து பேசிய இந்திய வெளியுறவத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், இந்தியாவிற்கு வருமாறு அவருக்கு அழைப்பு விடுத்தார்.
-
ரஜினியின் 173-ம் படத்தில் இருந்து இயக்கனர் சுந்தர் சி விலகல் ஏன்..? கமல்ஹாசன் பதில்
15 Nov 2025சென்னை, ரஜினிக்கு கதை பிடிக்கும் வரையில் கதை கேட்டுக்கொண்டே இருப்போம் என அவரது 173-வது திரைப்படத்தின் தயாரிப்பாளர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.
-
மர்ம பலூன்களை பறக்கவிட்ட விவகாரம்: பெலாரஸ் எல்லையை மூடிய லித்துவேனியா
15 Nov 2025வில்னியஸ், தங்கள் எல்லைக்குள் மர்ம பலூன்களை பறக்கவிட்ட விவகாரத்தை அடுத்து பெலாரஸ் எல்லையை மூடியது லித்துவேனியா.
-
1 கோடி பேர் நோயால் பாதிப்பு: தமிழகத்தில் நீரிழிவு நோய் பாதிப்பை தடுக்க விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்: அமைச்சர் மா. சுப்பிரமணியன் தகவல்
15 Nov 2025சென்னை, தமிழகத்தில் நீரிழிவு நோய் பாதிப்பை தடுக்க தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
-
நைஜீரியாவில் தொடக்கப் பள்ளிகளில் தாய்மொழி கட்டாய கல்வி சட்டம் ரத்து
15 Nov 2025அபுஜா, நைஜீரியாவில் தொடக்க பள்ளிகளில் தாய்மொழி கட்டாய கல்வி சட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
-
வங்கக் கடலில் புயல் சின்னம் உருவானது: 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் எச்சரிக்கை
15 Nov 2025சென்னை, வங்கக் கடலில் புதிதாக குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது.
-
எஸ்.ஐ.ஆருக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் த.வெ.க. சார்பில் இன்று ஆர்ப்பாட்டம்
15 Nov 2025சென்னை, வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணியை கண்டித்து த.வெ.க. சார்பில் இன்று தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட இருக்கிறது.
-
பீகார் சட்டசபை தேர்தல் முடிவுகள் எனக்கு ஆச்சரியமளிக்கிறது: ராகுல்
15 Nov 2025பாட்னா, பீகார் தேர்தல் முடிவுகள் எனக்கு ஆச்சரியமளிக்கிறது என்று ராகுல் காந்தி கூறினார்.
-
டெல்லியில் காற்று மாசு; சுப்ரீம் கோர்ட் கவலை
15 Nov 2025புதுடெல்லி, டெல்லியில் காற்று மாசு குறித்து சுப்ரீம் கோர்ட் கவலை தெரிவித்துள்ள நிலையில், காற்று மாசு வழக்கில் வழக்கறிஞர்கள் காணொலி காட்சி மூலம் ஆஜராக அறிவுறுத்தியுள்ளது
-
காவல் நிலைய குண்டுவெடிப்பு எதிர்பாராத நிகழ்வு: மத்திய அரசு
15 Nov 2025புதுடெல்லி : ஜம்மு காஷ்மீரின் நவ்காம் காவல் நிலையத்தில் நிகழ்ந்த குண்டுவெடிப்பு எதிர்பாராத நிகழ்வு என்று மத்திய உள்துறை அமைச்சகத்தின் ஜம்மு காஷ்மீர் பிரிவு இணை செயலாளர்
-
தூய்மை பணியாளர்களுக்கு 3 வேளை உணவுத்திட்டம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
15 Nov 2025சென்னை, சென்னை மாநகராட்சியில் தூய்மைப் பணியாளர்களுக்கான உணவுத்திட்டத்தை சனிக்கிழமை தொடங்கி வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின், டிசம்பர் முதல் தமிழகத்தில் அனைத்து மாநகராட்சி,
-
பா.ஜ.க.வில் போட்டியிட்டு வெற்றி: பீகாரில் இளம் வயது எம்.எல்.ஏவான நாட்டுப்புற பாடகி மைதிலி தாகூர்..!
15 Nov 2025பாட்னா, பீகார் மாநில தேர்தலில் பா.ஜ.க. சார்பில் போட்டியிட்டு 25 வயதே ஆன நாட்டுப்புற பாடகி மைதிலி தாகூர் வெற்றிப்பெற்று எம்.எல்.ஏ ஆகியுள்ளார்.
-
இந்தியாவுடன் இந்த ஆண்டு இறுதிக்குள் வர்த்தக ஒப்பந்தம் : அமெரிக்க அதிகாரி தகவல்
15 Nov 2025வாஷிங்டன் : இந்தியாவுடன் இந்த ஆண்டு இறுதிக்குள் வர்த்தக ஒப்பந்தம்; அமெரிக்க அதிகாரி தகவல் தெரிவித்தார்.
-
4 ரிக்டர் அளவில் ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்
15 Nov 2025காபுல், ஆப்கானிஸ்தானில் 4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவானது.
-
எஸ்.ஐ.ஆர். தொடர்பான கூட்டங்களுக்கு த.வெ.க.வையும் அழைக்க வேண்டும்;: தேர்தல் ஆணையத்திற்கு விஜய் கடிதம்
15 Nov 2025சென்னை : தேர்தல் ஆணையம் நடத்தும் கூட்டங்களுக்கு தமிழக வெற்றிக் கழகத்திற்கும் அழைப்பு விடுக்க வேண்டும் என தலைமை தேர்தல் ஆணையத்திற்கு அக்கட்சியின் தலைவர் விஜய் கடிதம் எழு
-
பீகார் சட்டப்பேரவை தேர்தல்: பா.ஜ.க.வுக்கு முதல்வர் பதவி
15 Nov 2025பாட்னா, தேசிய ஜனநாயக கூட்டணி அசுர பலத்துடன் காங்கிரஸ் கூட்டணியை வீழ்த்தி ஆட்சியை தக்கவைத்துள்ளது.
-
அரசியலில் இருந்து விலகினார் லல்லு பிரசாத் மகள் ரோகிணி
15 Nov 2025பாட்னா, அரசியலில் இருந்து விலகுகிறேன் என்று லல்லு பிரசாத்தின் மகள் ரோகிணி ஆச்சார்யா அறிவித்துள்ளார்.



