முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விக்னேஷ் விஜயகுமார் இயக்கும் காமெடி டிராமா

புதன்கிழமை, 19 ஜனவரி 2022      சினிமா
Image Unavailable

Source: provided

Trend Loud India Digital  மற்றும்  இயக்குநர்/தயாரிப்பாளர் பாலாஜி மோகனின்  Open Window நிறுவனங்கள் இணைந்து தங்களது  இரண்டாவது படைப்பை அறிவித்துள்ளன. இந்த புதிய தமிழ் இணைய தொடர்  பாலாஜி மோகனின் உதவி இயக்குநராக பணிபுரிந்த, அறிமுக இயக்குநர் விக்னேஷ் விஜயகுமார் எழுதி இயக்குகிறார். காமெடி டிராமா இணைய தொடராக உருவாகும் இத்தொடரில் பிரசன்னா, SPB சரண், தன்யா பாலகிருஷ்ணா, கனிகா, சுரேஷ் சக்ரவர்த்தி மற்றும் பல பிரபல நட்சத்திரங்கள் இணைந்து நடிக்கின்றனர். சென்னை சுற்றியுள்ள பகுதிகளில் இத்தொடரின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.  பிப்ரவரி மாதம் இத்தொடரின் படப்பிடிப்பு முடிவடையவுள்ளது. கிரியேட்டிவ்  புரடியூசராக பாலாஜிமோகன் பணியாற்ற, ராஜா ராமமூர்த்தி  இத்தொடரை தயாரிக்கிறார். சஞ்சய் சுபாஷ் & வித்யா சுகுமாரன் ஆகியோர் இணை தயாரிப்பு செய்கின்றனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து