எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தடுப்பூசிக்கு எதிரான இயக்கத்தால் ஈர்க்கப்பட்ட செக் குடியரசை சேர்ந்த கிராமிய பெண் பாடகி கொரோனாவால் உயிரிழந்து உள்ளார்.
செக் குடியரசு நாட்டை சேர்ந்த பெண் கிராமிய பாடகி ஹனா ஹொர்கா. 57 வயதான இவர் கொரோனா தடுப்பூசிக்கு எதிரான இயக்கங்களால் ஈர்க்கப்பட்டுள்ளார். இதனால், ஹனா ஹெர்கா தடுப்பூசி செலுத்திக் கொள்ளவில்லை. அதே வேளை தடுப்பூசி செலுத்தியிருந்த அவரது கணவர் மற்றும் மகன் ஜென் ரீக் ஆகிய இருவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ளுமாறு ஹனாவிடம் தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்துள்ளனர். ஆனால், ஹனா தடுப்பூசி செலுத்திக் கொள்வதை விட கொரோனா வருவதே மேல் என கூறியுள்ளார்.
இதற்கிடையில், ஹனா ஹொர்காவின் கணவருக்கும், மகன் ரீக்கிற்கும் கடந்த சில நாட்களுக்கு முன்னர் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, இருவரும் தனிமைப்படுத்திக் கொண்டனர். ஆனால், ஹனா ஹெர்க்கா தனது கணவர் மற்றும் மகனுடன் எந்த வித பாதுகாப்பு வழிமுறைகளையும் பின்பற்றாமல் தொடர்பில் இருந்துள்ளார். தனக்கு கொரோனா வந்ததும் அந்த பாதிப்பில் இருந்து குணமடைந்து அதன் பின்னர் தியேட்டர் போன்ற பொதுஇடங்களுக்கு செல்லலாம் என அவர் நினைத்துள்ளார்.
இந்நிலையில், கணவர் மற்றும் மகனை தொடர்ந்து ஹனாவுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்னர் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால், அவர் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டிருந்தார். ஆனால், கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஹனாவுக்கு உடல்நிலை மிகவும் மோசமாகியுள்ளது. கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கிய ஹனா கடந்த ஞாயிற்றுக்கிழமை தனது வீட்டில் உயிரிழந்தார்.
உயிரிழப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் ஹனா தனது சமூகவலை தள பக்கத்தில், நான் குணமடைந்து விட்டேன். இது (கொரோனா) தீவிரமானது. ஆகையால், தற்போது தியேட்டர் செல்வது முக்கியமானது. கடல் பயணம் தற்போது மிகவும் முக்கியம் என பதிவிட்டுள்ளார். கொரோனா பாதிப்பால் தனது தாயார் உயிரிழக்க கொரோனா தடுப்பூசிக்கு எதிரான பிரசாரமே காரணம் என ஹனாவின் மகன் ரீக் குற்றஞ்சாட்டியுள்ளார். கொரோனாவை வேண்டுமென்றே வரவைத்த பாடகி ஹனா உயிரிழந்த சம்பவம் செக் குடியரசு நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 1 year 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 1 month ago |