தமிழ்நாடு இந்து சமய மற்றும் அறநிலையத்துறையில் உள்ள 'நிர்வாக அதிகாரி (நிலை -III)' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தமிழக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் தி.மு.க - அ.தி.மு.க கூட்டணியில் இடம்பெற்ற கட்சிகள் இடையே 'வார்டு பங்கீடு' குறித்த பேச்சுவார்த்தை துவங்கியுள்ளது. பேச்சுவார்த்தையில் இறுதி முடிவு எட்டிய பிறகு வேட்பாளர்கள் குறித்த பட்டியல் வெளியாகவுள்ளது.
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அடுத்த மாதம் (பிப்ரவரி) 19-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்குகிறது. குறுகிய கால இடைவெளியில் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதால் அரசியல் கட்சிகள் தேர்தல் அறிவிப்பு வெளியானதும் தேர்தல் பணியில் சுறுசுறுப்பாகி விட்டன.
தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்டு, மனித நேய மக்கள் கட்சி ஆகிய கட்சிகள் இடம் பெற்றுள்ளன. அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜனதா இடம் பெற்றுள்ளது. அந்த கூட்டணியில் இருந்த பா.ம.க. வெளியேறி விட்டது. இந்த தேர்தலில் தனித்து போட்டியிடும் என்று தெரிகிறது. இது தவிர தே.மு.தி.க, மக்கள் நீதிமய்யம், நாம் தமிழர், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் ஆகிய கட்சிகளும் தனித்து போட்டியிடுகிறது.
தி.மு.க. மாவட்ட செயலாளர்களுடன் நேற்று மாலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். அப்போது அந்த மாவட்டங்களில் உள்ள மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி வார்டுகளில் எத்தனை தொகுதிகளில் தி.மு.க. போட்டியிடுவது, கூட்டணி கட்சிகளுக்கு எத்தனை வார்டுகள் ஒதுக்கீடு செய்வது என்பது தொடர்பாக கருத்து கேட்டறிந்ததாக தெரிகிறது. மாவட்ட வாரியாக கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வார்டு பங்கீடுகளை முடித்து கொள்ளும்படி அறிவுரை வழங்கியதாகவும் தெரிகிறது.
தேர்தல் தேதி அறிவிப்பை தொடர்ந்து உடனடியாக தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் நேர்காணல் நடத்தி வேட்பாளர் பட்டியல் தயாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி சென்னை தெற்கு மாவட்டத்தில் மாவட்ட செயலாளரான மா.சுப்பிரமணியன் நேற்று நேர்காணல் நடத்தினார். இதேபோல் பல மாவட்டங்களில் நேற்று நேர்காணல் தொடங்கி நடைபெற்றது.
இந்த கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ் கட்சியில் பேச்சுவார்த்தை நடத்த மாவட்ட அளவில் தேர்தல் பணிக்குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவினர் தி.மு.க. மாவட்ட செயலாளர்களுடன் வார்டு பங்கீடுகள் பற்றி உடனடியாக பேச்சுவார்த்தையை தொடங்குவார்கள் என்று மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி அறிவித்துள்ளார்.
ஊரக உள்ளாட்சி தேர்தலின்போது மாவட்டங்களில் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகளில் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டன. கூட்டணி கட்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை என்று புகார் எழுந்தது. இந்த முறை அந்த மாதிரி சூழ்நிலைகள் ஏற்படாதவாறு பார்த்து கொள்ள தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றள்ள கட்சிகள் திட்டமிட்டுள்ளன.
அ.தி.மு.க.வை பொறுத்தவரை சில மாவட்டங்களில் ஏற்கனவே கூட்டணி பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுள்ளன. நேற்று அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் அந்தந்த மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினர். அப்போது அ.தி.மு.க. போட்டியிட விரும்பும் வார்டுகள், வேட்பாளர்கள் பற்றி ஆலோசித்ததாக தெரிகிறது. இதைத் தொடர்ந்து வேட்பாளர்கள் பட்டியலையும் தயார் செய்து கட்சி மேலிடத்துக்கு அனுப்பு பணியும் நடைபெறுகிறது.
பா.ஜனதா மாவட்ட தலைவர்கள் கூட்டம் இன்று (வெள்ளி) காலை 10.30 மணிக்கு கமலாலயத்தில் நடக்கிறது. இதில் மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொள்கிறார். அப்போது பா.ஜனதா போட்டியிட விரும்பும் வார்டுகள், தகுதியான வேட்பாளர்கள் பற்றி ஆலோசித்து முடிவெடுக்கப்படுகிறது. இன்று அ.தி.மு.க. மேலிட குழுவினருடன் பேசி வார்டுகள் ஒதுக்கீடு தொடர்பாக இறுதி முடிவெடுப்பார்கள் என்று கூறப்படுகிறது.
தி.மு.க.வில் மாநகராட்சிகளை பொறுத்தவரை ஒவ்வொரு வார்டிலும் 25 முதல் 40 பேர் வரை போட்டியிட விருப்ப மனு கொடுத்துள்ளார்கள். இதேபோல் நகராட்சி, பேரூராட்சிகளிலும் சராசரியாக 10 பேர் விருப்ப மனு கொடுத்துள்ளார்கள். அதன் அடிப்படையில் நேர்காணல் நடத்தி வேட்பாளர்கள் பட்டியல் தயாரிக்கப்படுகிறது. தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. கூட்டணிகளில் வேட்பாளர்கள் பட்டியல் தயாராக உள்ளது. தலைவர்கள் மத்தியில் கூட்டணி இடப்பங்கீடு தொடர்பாக பேசி முடிவெடுத்ததும் வேட்பாளர்கள் பட்டியல் ஓரிரு நாளில் வெளியாகும் என்று தெரிகிறது.
நகர்ப்புற உள்ளாட்சித்தேர்தல் குறித்து அ.ம.மு.க. மண்டல நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம், பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன், தலைமையில், சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமைக்கழக அலுவலகத்தில் நேற்று பிற்பகலில் நடந்தது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கொத்தமல்லி சாதம்
1 day 18 hours ago |
எலுமிச்சை சாதம்
2 weeks 2 days ago |
கொத்தமல்லி சிக்கன்
1 month 1 week ago |
சிக்கன் மசாலா
2 months 1 day ago |
மதுரை மட்டன் கறி தோசை.
2 months 3 weeks ago |
சிக்கன் போன்லெஸ் 65.
2 months 4 weeks ago |
-
கிழக்கு உக்ரைனை கைப்பற்ற ரஷ்யப் படையினர் தீவிரம்
28 May 2022கிழக்கு உக்ரைனை கைப்பற்றும் முயற்சியில் ரஷ்யப் படையினர் தீவிர தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
-
அமெரிக்க துப்பாக்கிச்சூடு சம்பவங்களை தடுக்க முன்னாள் அதிபர் டிரம்ப் ஐடியா
28 May 2022டெக்சாஸ் தொடக்க பள்ளி படுகொலை சம்பவம் உலகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம்- 28-05-2022.
28 May 2022 -
தேசவிரோத சக்திகளிடமிருந்து தமிழ்நாட்டை காக்கவேண்டும்: தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம்
28 May 2022தேசவிரோத சக்திகளிடமிருந்து தமிழ்நாட்டை காக்கவேண்டும் என்றும், தமிழகம் முழுவதும் திராவிட மாடல் பயிற்சி பாசறை கூட்டம் நடத்த வேண்டும் என்றும் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்
-
விஷமக்காரன் விமர்சனம்
28 May 2022ஹனி பிரேம் ஒர்க்ஸ் நிறுவனம் சார்பில் விஷமக்காரன் என்ற படத்தை தயாரித்து எழுதி இயக்கியிருக்கிறார் வி என்கிற விஜய் குப்புசாமி.
-
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்: 5 கி.மீ. தொலைவுக்கு நீண்ட வரிசை
28 May 2022ஆந்திர மாநிலம் திருப்பதியில் உள்ள உலக புகழ் பெற்ற ஏழுமலையான் கோவிலில் பக்தர்களின் கூட்டம் அலைமோதுகிறது.
-
அக்னி நட்சத்திரம் முடிந்தாலும் வெயிலின் தாக்கம் சில நாட்களுக்கு அதிகரிக்கும்: வானிலை ஆய்வு மையம் தகவல்
28 May 2022அக்னி நட்சத்திரம் முடிந்தாலும் மேலும் சில நாட்களுக்கு வெயிலின் தாக்கம் அதிகமாகவே இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
இந்தியாவில் டெஸ்லா நிறுவன கார் தொழிற்சாலை அமைக்கப்படுமா? எலான் மாஸ்க் பதில்
28 May 2022டெஸ்லா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி எலான் மாஸ்க் தனது டெஸ்லா கார்களை இந்தியாவில் விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளார்.
-
சுப்ரீம் கோர்ட்டில் வழக்கை எதிர்கொள்ள தமிழக அரசின் வழக்கறிஞர்கள் குழு முல்லை பெரியாறு அணையில் ஆய்வு
28 May 2022முல்லைபெரியாறு அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்தவும், பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளவும், கேரள அரசு புதிய அணை கட்டுவதை தடுக்கவும், தமிழக அரசு சார்பில் பல்வேறு வழக்கு
-
குரங்கு அம்மை சமூக பரவலாக மாறக் கூடிய அபாயம் உள்ளது : உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை
28 May 2022குரங்கு அம்மை சமூக பரவலாக மாறக்கூடிய அபாயம் உள்ளதாக உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
-
பா.ம.க. தலைவராக அன்புமணி ராமதாஸ் : முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
28 May 2022சென்னை : பா.ம.க. தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள அன்புமணி ராமதாசுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
இலங்கையில் 21-வது சட்டதிருத்தம் விரைவில் நிறைவேற்றப்படும்: ரணில் தலைமையில் நடந்த கூட்டத்தில் முடிவு
28 May 2022இலங்கையில் 21-வது சட்டதிருத்தம் விரைவில் நிறைவேற்றப்படும் என பிரதமா் ரணில் விக்ரமசிங்கே தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
-
கேரளாவில் கணவன், மனைவி, குழந்தைகள் என ஒரே குடும்பத்தில் 4 பேருக்கும் ஒரே நாளில் வரும் பிறந்ததினம்
28 May 2022திருமணத்திற்கு பிறகு கணவன்-மனைவி இருவருமே ஒரே நாளில் பிறந்த நாளை கொண்டாடி வந்தனர். இதன்பின்பு நடந்தது தான் வினோதம்.
-
கடந்த 8 ஆண்டுகளில் ஏழைகளுக்கு முன்னுரிமை அளித்து பாஜக அரசு செயல்பட்டு வருகிறது: குஜராத்தில் பிரதமர் மோடி உரை
28 May 2022கடந்த 8 ஆண்டுகளில் ஏழைகளுக்கு முன்னுரிமை அளித்து பா.ஜ.க அரசு செயல்பட்டு வருவதாக குஜராத்தில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
-
பயணிகளை தடுத்த விவகாரம்: இண்டிகோ விமான நிறுவனத்திற்கு ரூ.5 லட்சம் அபராதம் - டி.ஜி.சி.ஏ
28 May 2022மாற்றுத்திறனாளி குழந்தையுடன் வந்த பெற்றோரை விமானத்தில் ஏற விடாமல் தடுத்த சம்பவத்தில் இண்டிகோ விமான நிறுவனத்திற்கு ரூ.
-
வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் 4 நாள்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு
28 May 2022தமிழகத்தில் அடுத்த 5 நாள்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
சூடானில் பெண்ணை கொலை செய்த செம்மறி ஆட்டுக்கு வினோத தண்டனை
28 May 2022பெண்ணை கொலை செய்த செம்மறி ஆட்டுக்கு கோர்ட்டால் வினோத தண்டனை அளிக்கப்பட்ட சம்பவம் தெற்கு சூடானில் அரங்கேறியுள்ளது.
-
வருமான வரி வழக்கை ரத்து செய்ய கோரிய நடிகர் எஸ்.ஜே. சூர்யாவின் மனு ஐகோர்ட்டில் தள்ளுபடி
28 May 2022வருமான வரி வழக்கை ரத்து செய்யக் கோரி எஸ்.ஜே.சூர்யா தாக்கல் செய்த மனுக்களை சென்னை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது.
-
மனைவி, குழந்தைகளை கொன்று ஐ.டி. ஊழியர் தற்கொலையா? - காவல் ஆணையர் ரவி விளக்கம்
28 May 2022சென்னை : சென்னை பொழிச்சலூரில் ஐ.டி.
-
கனடாவில் பள்ளிக்கூடம் அருகே துப்பாக்கியுடன் நடமாடியவரை சுட்டுக் கொன்ற போலீசார்
28 May 2022கனடா நாட்டின் டொரோண்டோ நகரில் உள்ள ஒரு பள்ளிக்கூடம் அருகே துப்பாக்கியுடன் நடமாடிய இளைஞரை சுற்றி வளைத்த போலீசார் அவரை சுட்டுவீழ்த்தினர்.
-
டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசை: 4- வது இடம் பிடித்தது இலங்கை
28 May 2022வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இலங்கை அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. முதல் டெஸ்ட் போட்டி கடந்த வாரம் டிராவில் முடிந்தது.
-
நீட் தேர்வு விவகாரம்: அண்ணாமலை கருத்து
28 May 2022நீட் தேர்வு தொடர்பான தி.மு.க.வின் அரசியலுக்கு தமிழக மாணவர்களிடம் நேரமில்லை என்று பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.
-
சென்னையில் உர இருப்பு குறித்த ஆய்வு கூட்டம் : உழவர் நலத்துறை செயலாளர் தலைமையில் நடந்தது
28 May 2022சென்னை : சென்னை சேப்பாக்கம் வேளாண்மை இயக்குநரக அலுவலகத்தில் உர இருப்பு குறித்த சிறப்பு ஆய்வுக் கூட்டம் உழவர் நலத்துறை அரசு செயலாளர் சமயமூர்த்தி தலைமைய
-
ஒடுக்கப்பட்ட மக்களுக்காக உழைத்தவர் கருணாநிதி: மாநிலங்கள் வளர்ச்சி அடைந்தால் நாடும் வளர்ச்சி அடையும் : சிலை திறப்பு நிகழ்ச்சியில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு
28 May 2022சென்னை : மாற்றுக்கருத்துகள் இருந்தாலும், கருணாநிதியின் செயல்பாடுகளை வியப்போடு பார்த்துள்ளேன் என துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு பேசினார்.
-
சென்னை கடற்கரை ரெயில் நிலையத்தில் விபத்துக்கு காரணமான மின்சார ரயில் டிரைவர் பணியிடை நீக்கம்..!
28 May 2022சென்னை கடற்கரை ரெயில் நிலையத்தில் நடந்த விபத்துக்கு காரணமான மின்சார ரெயில் டிரைவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.