முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தங்கம் பவுனுக்கு ரூ.504 குறைந்தது: ரூ.37 ஆயிரத்துக்கு கீழ் வந்தது

வியாழக்கிழமை, 27 ஜனவரி 2022      வர்த்தகம்
Image Unavailable

சென்னையில் நேற்று காலை ஆபரண தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.504 சரிந்து ரூ.36 ஆயிரத்து 592-க்கு விற்றது. கிராமுக்கு ரூ.63 குறைந்து ரூ.4 ஆயிரத்து 574 ஆக இருந்தது.

தங்கம் விலையில் சில நாட்களாக ஏற்றத்தாழ்வு இருந்து வருகிறது. இதற்கிடையே நேற்று முன்தினம் தங்கம் பவுன் மீண்டும் ரூ.37 ஆயிரத்தை தாண்டியது. நேற்று முன்தினம் பவுனுக்கு ரூ.256 அதிகரித்து ரூ.37 ஆயிரத்து 96-க்கு விற்றது.

இந்த நிலையில் நேற்று தங்கம் விலை அதிரடியாக குறைந்தது. சென்னையில் நேற்று காலை ஆபரண தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.504 சரிந்து ரூ.36 ஆயிரத்து 592-க்கு விற்பனையானது. கிராமுக்கு ரூ.63 குறைந்து ரூ.4 ஆயிரத்து 574 ஆக இருந்தது. தங்கம் பவுன் மீண்டும் ரூ.37 ஆயிரத்துக்கு கீழ் வந்துள்ளது.

தங்கத்தை போலவே வெள்ளி விலையும் குறைந்தது. வெள்ளி கிலோவுக்கு ரூ.800 குறைந்து ரூ.67 ஆயிரத்து 700 ஆக உள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.67.70க்கு விற்பனையானது. சில மாதங்களுக்கு முன்பு தங்கம் விலையில் தொடர்ந்து குறைவு காணப்பட்டதால் பவுன் ரூ.36 ஆயிரத்துக்கு கீழ் வந்தது. அதன்பின் விலை உயர்ந்ததால் ரூ.36 ஆயிரத்தை தாண்டிய தங்கம் விலையில் ஏற்றத்தாழ்வு நிலவி வருகிறது. இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் பவுனுக்கு ரூ.504 குறைந்து இருப்பது ஏழை, நடுத்தர மக்களுக்கு ஆறுதலாக அமைந்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து