முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆஸ்திரேலியா ஓபன் பெண்கள் ஒற்றையர்: இறுதிப் போட்டியில் மோதும் ஆஷ்லே பார்டி - கோலின்ஸ்

வியாழக்கிழமை, 27 ஜனவரி 2022      விளையாட்டு
Image Unavailable

Source: provided

மெல்போர்ன்: மெல்போர்ன் நகரில் நடைபெற்று வரும் ஆஸ்திரேலிய ஓபன் இறுதிப் போட்டியில் ஆஷ்லே பார்டி, கோலின்ஸ் நாளை (29-ம் தேதி) பலப்பரீட்சை நடத்துகிறார்கள்.

அரையிறுதியில்...

ஆஸ்திரேலியா கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் மெல்போர்ன் நகரில் நடைபெற்று வருகிறது. நேற்று பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு அரையிறுதி போட்டிகள் நடைபெற்றது. ஒரு ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவின் ஆஷ்லே பார்டி, அமெரிக்காவின் மேடிசன் கெய்ஸ் ஆகியோர் பலப்பரீட்சை நடத்தினர்.

நம்பர் ஒன்....

சொந்த மண்ணில் நம்பர் ஒன் வீராங்கனையான ஆஷ்லே பார்டி சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவரது ஆட்டத்திற்கு மேடிசன் கெய்ஸ்-ஆல் ஈடுகொடுக்க முடியவில் ஆஷ்லே பார்டி 6-1, 6-3 என நெர்செட் கணக்கில் எளிதாக வெற்றி பெற்று பார்டி இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.

கோலின்ஸ்...

மற்றொரு அரையிறுதி ஆட்டத்தில் அமெரிக்காவின் டேனிலே கோலின்ஸ், போலந்து வீராங்கனை இகா ஸ்வியாடெக்கை எதிர்கொண்டார். இதில் 7-ம் நிலை வீராங்கனையான இகா, 27-ம் நிலை வீராங்கனையான கோலின்ஸ் ஆட்டத்திற்கு ஈடுகொடுக்க முடியவில்லை. இதனால் இகா 4-6, 1-6 என நேர்செட் கணக்கில் தோல்வியடைந்து இறுதிப் போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தார். 29-ந்தேதி (நாளை) நடைபெறும் இறுதி போட்டியில் ஆஷ்லே பார்டி- டேனிலே கோலின்ஸ் பலப்பரீட்சை நடத்துகின்றனர்.

BOX - 1

42 வருடங்களில்...

ஆஸி. ஓபன் டென்னிஸில் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவில் கலந்துக்கொண்ட அஷ்லிக் பார்ட்டி, இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றதன்மூலம் கடந்த 42 வருடங்களில் இறுதிப்போட்டியில் பங்கேற்ற முதல் ஆஸ்திரேலியர் என்ற பெருமையை பெற்றிருக்கிறார். 

முன்னதாக இவர் க்ராண்ட் ஸ்லாம் பட்டங்கள், ஃப்ரென்ச் ஓபன் 2019, விம்பில்டன் 2021 ஆகியவற்றை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த ஆஸி. ஓபன் டென்னிஸ் இறுதிப்போட்டியில் அஷ்லிக் பார்ட்டி, டேனியல் கோலின்ஸை எதிர்கொள்ள இருக்கிறார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து