முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்த வாரம் வெளியாகும் ரங்கா

செவ்வாய்க்கிழமை, 10 மே 2022      சினிமா
Cipraj 2022 05-10

Source: provided

சத்யா படத்தினை தொடர்ந்து சிபிராஜ் ஹீரோவாக பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். மாயோன் படம் விரைவில் வெளியாக இருக்கிறது. இந்த வரிசையில் அறிமுக இயக்குனர் டி.எல்.வினோத் மற்றும் சிபி சத்யராஜ் கூட்டணியில் உருவாகியுள்ள ஃபேன்டசி திரைப்படம் ‘ரங்கா‘. இந்த படத்தை பாஸ் மூவிஸ் சார்பில் விஜய் கே செல்லையா தயாரித்துள்ளார். இந்த படத்திற்கு ராம் ஜீவன் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் கதாநாயகியாக நிகிலா விமல் நடித்துள்ளார். இந்தப் படத்தின் டிரெய்லரை நடிகர் கார்த்தி சமீபத்தில் வெளியிட்டார்.   டிரெய்லர் நல்ல வரவேற்பைப் பெற்றதைத் தொடர்ந்து இப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. அப்போது பேசிய சிபிராஜ், மிகப்பெரிய பட்ஜெட்டில் சிறப்பாக உருவாகி இருக்கும் இப்படத்துக்கு அனைவரும் ஆதரவு தர வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து