முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திரிபுரா புதிய முதல்வராக மாணிக் ஷாகா தேர்வு

சனிக்கிழமை, 14 மே 2022      இந்தியா
Manik-Shaga 2022 05 14

Source: provided

அகர்தாலா : திரிபுரா மாநில புதிய முதல்வராக மாணிக் ஷாகா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

வடகிழக்கு மாநிலமான திரிபுராவில் பா.ஜ.க. ஆட்சி உள்ளது. அங்கு, முதல்வராக அக்கட்சியை சேர்ந்த பிப்லப் தேப் உள்ளார். அம்மாநிலத்திற்கு அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. நேற்று முன்தினம் மத்திய உள்துறை அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான அமித்ஷாவை பிப்லப் தேப் சந்தித்து பேசியிருந்தார்.

இந்நிலையில் முதல்வர் பதவியில் இருந்து பிப்லப் தேப் நேற்று ராஜினாமா செய்தார். இதற்கான கடிதத்தை கவர்னரிடம் வழங்கினார்.  இதனிடையே புதிய முதல்வர் தேர்வு செய்யப்படுவதற்கான கூட்டம் நேற்று மாலை நடைபெற உள்ளதாகவும், தொடர்ந்து புதிய முதல்வர்  அறிவிக்கப்படுவார் என தகவல் வெளியாகி இருந்தது. இதற்காக கட்சியின் மேலிட பார்வையாளராக பூபேந்தர் யாதவும் அனுப்பி வைக்கப்பட்டார். 

திரிபுரா மாநில பா.ஜ.க. முதல்வராக இருந்த பிப்லப்குமார் தேப் ராஜ்யசபா எம்.பி.யாக தேர்வு செய்யப்படவுள்ளதையடுத்து முதல்வர் பதவியிலிருந்து விலகியதாக கூறப்படுகிறது. இதையடுத்து புதிய முதல்வரை தேர்வு செய்ய தலைநகர் அகர்தாலாவில் பா.ஜ.க. எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம் நேற்று நடந்தது.

இதில் மாணிக் ஷாகா முதல்வராக தேர்வு செய்யப்பட்டார். இம்மாநிலத்திற்கு அடுத்தாண்டு (2023) சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் முதல்வர் மாற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து