முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டுவீட்டை நீக்கிய அம்பத்தி ராயுடு குழப்பத்தில் சென்னை ரசிகர்கள்

சனிக்கிழமை, 14 மே 2022      விளையாட்டு
Ambati 2022-05-14

Source: provided

முன்னதாக அம்பத்தி ராயுடு தனது ட்விட்டர் பக்கத்தில், “இதுதான் நான் பங்கேற்கும் கடைசி ஐபிஎல் என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறேன். 13 வருடங்களில் ஐபில் 2 சிறந்த அணிகளில் அங்கம் வகித்து விளையாட எனக்கு ஓர் அற்புதமான நேரம் கிடைத்தது. இந்த அற்புதமான பயணத்தை அளித்த மும்பை இந்தியன்ஸ் , சென்னை சூப்பர் கிங்ஸ்க்கு எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன்” என்று பதிவிட்டிருக்கிறார்.

இந்த நிலையில் இப்பதிவை சில நிமிடங்களில் நீக்கினார். இதுகுறித்து எந்த விளக்கத்தை அவர் இதுவரை அளிக்கவில்லை. கடந்த 2019 ஆம் ஆண்டு உலகக் கோப்பைப் போட்டியில் தனக்கு இடம் கிடைக்காத நிலையில் அனைத்து சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக ராயுடு அறிவித்தார். தற்போது ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக சிறப்பாக விளையாடி வருகிறார் ராயுடு. ஐபிஎல்லில் 181 போட்டிகளில் விளையாடி உள்ள அம்பத்தி ராயுடு இதுவரை 4,000 ரன்களை குவித்துள்ளார். இதில் 22 அரை சதமும், ஒரு சதமும் அடித்துள்ளார்.

_______________

டென்னிஸ் தரவரிசை: ஜோகோவிச் முதலிடம்

ஓபன் டென்னிஸ் போட்டியில் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியதன் மூலம் முன்னணி வீரர் நோவக் ஜோகோவிச் தரநிலையில் முதலிடத்தை தக்க வைத்துள்ளார். இத்தாலி ஓபன் டென்னிஸ் காலிறுதி ஆட்டத்தில் கனடா வீரர் ஃபெலிக்ஸ் ஆகர் அலியாஸ்ஸிம் உடன் மோதினார். டை பிரேக்கர் வரை சென்ற இரண்டு செட்களையும் 7-5, 7-6 என்ற கணக்கில் ஜோகோவிச் போராடி வென்றார். இதன்மூலம், தரவரிசையில் முதலிடத்தை ரஷ்ய வீரர் மெத்வதேவுக்கு விடுவதில் இருந்து ஜோகோவிச் தப்பினார்.

டென்னிஸ் வாழ்க்கையில் தமது புதிய மைல்கல்லை அடைவதற்கான வாய்ப்பு இத்தாலி ஓபன் டென்னிஸ் தொடரில் ஜோகோவிச்சுக்கு கிட்டியுள்ளது. அடுத்து அவர் களமிறங்க உள்ள அரையிறுதிப் போட்டியில் வெற்றி பெற்றால், அது ஜோகோவிச்சின் ஆயிரமாவது வெற்றியாக அமைய உள்ளது.

_______________

உலக மகளிர் டென்னிஸ்: தமிழக அரசு நிதி ஒதுக்கீடு

ஏ.டி.பி. டென்னிஸ் போட்டி சென்னையில் 1997ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. தெற்கு ஆசியாவில் நடைபெற்று வந்த ஒரே ஏ.டி.பி. போட்டி இதுவாகும். 1997 முதல் 2001 வரை கோல்டு பிளேக் ஓபன் என்ற பெயரிலும், 2002 முதல் 2004 வரை டாடன் ஓபன், 2005 முதல் 2009 வரை சென்னை ஓபன், 2010 முதல் 2017 வரை ஏர்செல் சென்னை ஓபன் என்ற பெயரிலும் இந்தப் போட்டி நடைபெற்றது. 21 ஆண்டுகள் ஏ.டி.பி. ஆண்கள் டென்னிஸ் போட்டி சென்னை நுங்கம்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. 2018ம் ஆண்டு இந்த போட்டி மகாராஷ்டிர மாநிலம் புனேக்கு மாற்றப்பட்டது. 

இந்த நிலையில் முதல் முறையாக உலக மகளிர் டென்னிஸ் போட்டியை சென்னையில் இந்த ஆண்டு நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வந்தன. டபிள்யு.டி.ஏ. என அழைக்கப்படும் உலக மகளிர் டென்னிஸ் போட்டி நடைபெறும் தேதியை தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் அறிவித்தார். இந்தப் போட்டியை நடத்துவதற்கு முதல்கட்டமாக ரூ. 5 கோடியை தமிழக அரசு உயர்த்தி உள்ளது.

_______________

ஆசிய கோப்பை ஹாக்கி தொடர்:  இந்திய அணி கேப்டன் விலகல்

ஆசிய கோப்பை ஹாக்கி தொடர் இந்த மாதம் 23-ஆம் தேதி ஜகார்த்தாவில் தொடங்க உள்ளது. இதற்காக இந்திய ஆடவர் அணியினர் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், பயிற்சியின் போது மணிக்கட்டில் ஏற்பட்ட காயம் காரணமாக இந்திய அணியின் கேப்டன் ரூபிந்தர் பால் சிங் இந்த போட்டியில் இருந்து விலகியதாக ஹாக்கி இந்தியா தெரிவித்துள்ளது. ரூபிந்தருக்குப் பதிலாக இந்திய அணியை பீரேந்திர லக்ரா வழிநடத்துவார். துணை கேப்டனாக ஸ்டிரைக்கர் எஸ்.வி.சுனில் இருப்பார்.

இது குறித்து பயிற்சியாளர் பி.ஜே.கரியப்பா கூறுகையில், ரூபிந்தர் பயிற்சியின்போது ஏற்பட்ட காயத்தினால் ஆசிய கோப்பை விளையாட்டில் கலந்துகொள்ள இயலவில்லை என்றார். ‘பீரேந்திரா மற்றும் சுனில் அனுபவம் வாய்ந்தவர்கள். பல வருடமாக அணியில் இருக்கின்றார்கள். ரூபிந்தரை நாங்கள் தவறவிட்டாலும் எங்களிடம் திறமையான  வீரர்கள் இருக்கிறார்கள். அவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்துவதற்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள்’ என்றும் பயிற்சியாளர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து