முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரூ.38 ஆயிரத்தை தாண்டியது: தங்கம் விலை சவரனுக்கு 344 ரூபாய் அதிகரிப்பு

செவ்வாய்க்கிழமை, 17 மே 2022      தமிழகம்
Gold 2021 11 23

Source: provided

சென்னை : சென்னையில் நேற்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.344 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.38,168க்கு விற்பனையானது.

தங்கம் விலை கடந்த வாரம் ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டது. ஆனால் இந்த வார தொடக்கத்தில் இருந்தே விலை அதிகரித்து வருகிறது. கடந்த 9ந்தேதி (திங்கட்கிழமை) ஒரு பவுன் தங்கம் ரூ.38,872க்கு விற்கப்பட்டது. மறுநாள் 10-ந்தேதி அது 38,768 ஆக குறைந்தது. 11-ந்தேதி அது ரூ.38,440 ஆக குறைந்தது. 12-ந்தேதி சற்றே அதிகரித்து ரூ.38,584 ஆக உயர்ந்தது. மறுநாள் 13-ந்தேதி மீண்டும் அதிரடியாக பவுன் ரூ.38,040 ஆக குறைந்தது.

கடந்த சனிக்கிழமை மீண்டும் குறைந்து ரூ.38 ஆயிரத்துக்கு கீழே வந்தது. அன்று ரூ.37,896க்கு விற்கப்பட்டது. ஞாயிற்றுக்கிழமை அதே விலையில் நீடித்தது. நேற்று ஒரு பவுன் தங்கம் ரூ.37,824க்கு விற்கப்பட்டது. இந்த நிலையில் இந்த வாரத்தில் தங்கம் விலை மீண்டும் உயரத்தொடங்கி ரூ.38 ஆயிரத்தை தாண்டியது. நேற்று ஒரேநாளில் தங்கம் விலை பவுனுக்கு ரூ.344 அதிகரித்துள்ளது. நேற்று ஒரு பவுன் தங்கம் ரூ.38,168க்கு விற்பனையானது.

ஒரு கிராம் தங்கம் நேற்று முன்தினம் ரூ.4,728க்கு விற்கப்பட்டது. நேற்று கிராமுக்கு ரூ.43 அதிகரித்து ரூ.4,771க்கு விற்பனையானது. இதேபோல் வெள்ளி விலையும் நேற்று அதிகரித்தது. நேற்று முன்தினம் ஒரு கிராம் வெள்ளி ரூ.64.20க்கு விற்கப்பட்டது. நேற்று கிராமுக்கு ரூ.1.20 அதிகரித்து ரூ.65.40க்கு விற்பனையானது. ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.65,400க்கு விற்பனையானது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!