முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

10-ம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தால் திருத்தும் பணி ஜூன் 2-9 வரை நடைபெறும் தமிழக தேர்வுத்துறை அறிவிப்பு

வியாழக்கிழமை, 19 மே 2022      தமிழகம்
School-Education 2022 02 11

10-ம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தால் திருத்தும் பணி ஜூன் 2-9 வரை நடைபெறும் என்று தமிழக தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் 10 ஆம் வகுப்பிற்கான பொதுத்தேர்வுகள் கடந்த 6ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. சென்னை, தமிழகம் முழுவதும் எஸ்.எஸ்.எல்.சி. எனப்படும் 10-ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு 2021-22-ம் கல்வி ஆண்டிற்கான அரசு பொதுத்தேர்வுகள் கடந்த 6 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. 

தமிழகத்தின் அனைத்து மாவட்டத்திலும் உள்ள அரசு பள்ளிகள், அரசு ஆதிதிராவிடர் நல பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் மற்றும் சுயநிதி பள்ளிகளில் 10-ம் வகுப்பு பயிலும் 9.55 லட்சம் மாணவ-மாணவிகள் 3,936 தேர்வு மையங்களில் தேர்வினை எழுதுகின்றனர். மேலும், 7,712 மாற்றுத்திறனாளி, தனித்தேர்வர், சிறைவாசிகள் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதுகின்றனர்.

 இந்த நிலையில், தமிழகத்தில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி, ஜூன் 2 முதல் 9ம் தேதி வரை நடைபெறும் என்று தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து