முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பின்லாந்துக்கு இயற்கை எரிவாயு விநியோகத்தை நிறுத்திய ரஷ்யா

சனிக்கிழமை, 21 மே 2022      உலகம்
Russia 2022-05-21

Source: provided

ஹெல்சின்கி : தங்களது எதிா்ப்பையும் மீறி நேட்டோவில் இணைய விண்ணப்பித்துள்ள பின்லாந்துக்கு, இயற்கை எரிவாயு விநியோகத்தை ரஷ்யா நிறுத்திவைத்துள்ளது. இது குறித்து பின்லாந்து அரசு எண்ணெய் நிறுவனமான காஸும் தெரிவித்துள்ளதாவது:-

எரிவாயு கொள்முதலுக்கான தொகையை ரஷ்ய நாட்டு நாணயமான ரூபிளில் செலுத்தத் தவறியதால், எங்களுக்கு இயற்கை எரிவாயு விநியோகத்தை சனிக்கிழமை முதல் நிறுத்த வைக்கப் போவதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. இந்த முடிவு மிகவும் வருத்தத்துக்குரியது ஆகும் என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

பின்லாந்தின் எரிசக்தி பயன்பாட்டில் 6 சதவீதம் இயற்கை எரிவாயுவாகும். ஏறத்தாழ தங்களது அனைத்து எரிவாயு தேவையையும் ரஷ்யாவிடமிருந்துதான் பின்லாந்து பூா்த்தி செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!