முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகத்தில் பி ஏ-4 என்ற புதிய வகை கொரோனா வைரஸ் கண்டுபிடிப்பு : அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

சனிக்கிழமை, 21 மே 2022      தமிழகம்
Ma Subramanian 2022 01 10

Source: provided

சென்னை : தமிழகத்தில் பி ஏ-4 என்ற புதிய வகை கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.

சென்னை கிண்டியில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, 

கொரோனா வைரஸ் பலவகையாக உருமாறி பரவிக் கொண்டே வருகிறது. கொரோனா வைரஸில் ஆல்பா, பீட்டா, டெல்டா, டெல்டா பிளஸ், காமா, கப்பா என நிறைய உருமாற்றம் நிகழ்ந்து விட்டது. இறுதியாக ஒமைக்ரான் வந்தது. அதிலும் பி ஏ 1 பி ஏ 2 என்று 7 வகை வைரஸ்கள் உலகம் முழுவதும் பரவுவதாக கூறினார்கள். 

தமிழகத்தில் இதுவரை பி ஏ 1 மற்றும் பி ஏ 2 மட்டும்தான் வெளிப்படையாகத் தெரிந்தது. தமிழகத்தில் தற்போது பி ஏ 4 கண்டறியப்பட்டுள்ளது. தமிழகத்தில் இரண்டு, மூன்று பேருக்கு தொற்று ஏற்பட்டால், உடனடியாக ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது. அதன் அடிப்படையில் இங்குள்ள மரபணு பகுப்பாய்வு கூடத்தில் செய்யப்பட்ட சோதனை மூலம் இது கண்டறியப்பட்டுள்ளது.  அவ்வாறு மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள நாவலூரில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவருக்கு கொரோனா தொற்று பாதிப்பு இருந்தது.

உடனடியாக அவர்களது மாதிரிகளை மரபணு ஆய்வுக்கு அனுப்பியதில் ஒருவருக்கு, அது பி ஏ 4-ல் ஒரு வகை என்பதும், மரபணுவில் ஒரு உருமாற்றம், புதிய வகை வைரஸ் என்பது கண்டறியப்பட்டுள்ளது. இது ஒமைக்ரானில் ஒரு புதுவகை. ஒமைக்ரானில் உள்ள 7 வகைகளில் இதுவும் ஒன்று, 4-வது வகையைச் சேர்ந்தது. இந்த வகையான தொற்று ஆப்பிரிக்கா போன்ற நாடுகளில் வேகமாக பரவிக் கொண்டிருக்கிறது. அதைத்தான் அங்கு 4-வது அலை, 5-வது அலை என்று குறிப்பிடுகின்றனர் என்று தெரிவித்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து